சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கொவிட்-19 அண்மைத் தகவல்

இடுகை இடப்பட்ட நாள்: 05 OCT 2021 9:08AM by PIB Chennai

தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் இதுவரை 91.54 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 18,346 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 209 நாட்களில் இது மிக குறைந்த எண்ணிக்கை.

நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் மொத்த பாதிப்பில் 1 சதவிதத்துக்கும் கீழ் உள்ளது. தற்போது 0.75 சதவீதமாக உள்ளது. கடந்த 2020 மார்ச் மாதம் முதல், இது  மிகக் குறைந்த அளவு.

நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2,52,902; கடந்த 201 நாட்களில் இது மிக குறைந்த எண்ணிக்கை.

குணமடைந்தோர் விகிதம் தற்போது 97.93 சதவீதம்; கடந்த 2020 மார்ச் முதல் இது அதிகமான அளவு.

கடந்த 24 மணி நேரத்தில் 29,639 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,31,50,886

வாராந்திர பாதிப்பு விகிதம் (1.66 சதவீதம்) கடந்த 102 நாட்களாக 3 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.

தினசரி பாதிப்பு விகிதம் (1.61 சதவீதம்) கடந்த 36 நாட்களில் 3 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.

இதுவரை மொத்தம் 57.53 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1760957

*******


(வெளியீட்டு அடையாள எண்: 1761009) வருகையாளர் எண்ணிக்கை : 255
இந்த வெளியீட்டை படிக்க: Punjabi , English , Urdu , हिन्दी , Manipuri , Bengali , Gujarati , Telugu , Malayalam