பிரதமர் அலுவலகம்
‘விடுதலை@75-புதிய நகர்ப்புற இந்தியா: உருமாறும் நகர்ப்புறம்’ லக்னோவில் மாநாடு மற்றும் கண்காட்சி: பிரதமர் நாளை தொடங்கி வைக்கிறார்
Posted On:
04 OCT 2021 6:33PM by PIB Chennai
‘விடுதலை@75-புதிய நகர்ப்புற இந்தியா: உருமாறும் நகர்ப்புறம்’ உத்தரப் பிரதேசம் லக்னோவில் உள்ள இந்திரா காந்தி பிரதிஸ்தனில், நாளை காலை 10.30 மணிக்கு மாநாடு மற்றும் கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
உத்தரப் பிரதேசத்தில் 75 மாவட்டங்களைச் சேர்ந்த பிரதமரின் வீட்டு வசதித் திட்டப் பயனாளிகள் 75,000 பேருக்கு, வீட்டு சாவிகளை டிஜிட்டல் மூலம் பிரதமர் ஒப்படைக்கிறார். மற்றும் பயனாளிகளுடன் அவர் காணொலி வாயிலாக கலந்துரையாடுகிறார். ஸ்மார்ட் சிட்டி (பொலிவுரு நகரம்) மற்றும் அம்ருத் திட்டத்தின் கீழ், 75 நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்; ஃபேம்-2 திட்டத்தின் கீழ் லக்னோ, கான்பூர், வாரணாசி, பிரயாக்ராஜ், கோரக்பூர், ஜான்சி மற்றும் காசியாபாத் ஆகிய நகரங்களுக்கு 75 பேருந்துகளை அவர் தொடங்கி வைக்கிறார்; மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்தின் பல முன்னணித் திட்டங்கள் கீழ் 75 திட்டங்கள் அடங்கிய சிறு புத்தகத்தையும் அவர் வெளியிடுகிறார். கண்காட்சி அரங்கில் 3 கண்காட்சிகளையும் அவர் பார்வையிடுகிறார். லக்னோ பாபாசாஹெப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில், திரு அடல் பிகாரி வாஜ்பாய் இருக்கையை அமைக்கப்படுவதையும் பிரதமர் அறிவிப்பார்.
பாதுகாப்பு அமைச்சர், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர், உத்தரப் பிரதேச ஆளுநர் மற்றும் முதல்வர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
மாநாடு மற்றும் கண்காட்சி பற்றி:
விடுதலையின் அம்ருத் மகோத்ஸவத்தின் ஒரு பகுதியாக, இந்த மாநாடு - கண்காட்சியை மத்திய வீட்சி வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் அக்டோபர் 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடத்துகிறது. இது உத்தரப்பிரதேசத்தில் கொண்டுவரப்பட்ட உருமாற்றங்களில் சிறப்பு கவனம் செலுத்தி நகர்ப்புறத்தை மாற்றுவதை மையமாகக் கொண்டது. இந்த மாநாடு மற்றும் கண்காட்சியில், அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் பங்கேற்கும். அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவும், மேல்நடவடிக்கைக்கான உறுதி மற்றும் வழிகாட்டுதலுக்கு இது உதவும்.
இந்த மாநாடு மற்றும் கண்காட்சியில், கீழ்கண்டவாறு 3 கண்காட்சி அரங்குகள் அமைக்கப்படுகின்றன:
(i) புதிய நகர்ப்புற இந்தியா’ என்ற தலைப்பிலான கண்காட்சி, நகர்ப்புறத் திட்டங்களின் உருமாற்றத்தின் சாதனைகள் மற்றும் எதிர்கால திட்டங்களைக் காட்டும். கடந்த 7 ஆண்டுகளில் முன்னணி நகர்ப்புறத் திட்டங்களின் கீழ் ஏற்பட்ட சாதனைகளை எடுத்துரைக்கும் மற்றும் எதிர்காலத்துக்கான திட்டங்களைக் காட்டும்.
(ii) உலகளாவிய வீட்டு வசதித் தொழில்நுட்ப சவால் - இந்தியா-வின் கீழ் ‘இந்திய வீட்டுவசதி தொழில்நுட்ப மேலா’ என்ற தலைப்பிலான கண்காட்சி, 75 புதுமையான கட்டுமானத் தொழில்நுட்பங்களை காட்டுகிறது. இது உள்நாட்டில் உருவாக்கப்பட்ட புதுமையான கட்டுமானத் தொழில்நுட்பங்கள், பொருட்கள் மற்றும் நடைமுறைகளை எடுத்துக் கூறும்.
(iii) உத்தரப் பிரதேசம்@75: உத்தரப் பிரதேச நகர்புறத்தில் உருமாற்றம் என்ற தலைப்பில் இந்த கண்காட்சி 2017ம் ஆண்டுக்குப்பின் உத்தரப் பிரதேசத்தின் செயல்பாட்டை காட்டும்.
இந்த கண்காட்சிகள், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகத்தின் முன்னணி திட்டங்களின் கீழ் இது வரை செய்யப்பட்ட சாதனைகளை எடுத்துக் காட்டும். சுத்தமான நகர்ப்புற இந்தியா, நீர் பாதுகாப்புள்ள நகரங்கள், அனைவருக்கும் வீட்டு வசதி, புதிய கட்டுமானத் தொழில்நுட்பங்கள், பொலிவுரு நகரங்களை உருவாக்குதல், நிலையான இயக்கம் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளை ஊக்குவிக்கும் நகரங்கள் என்ற கருப்பொருட்களில் இந்தக் கண்காட்சி இருக்கும்.
இந்த கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி பொது மக்களின் பார்வைக்கு அக்டோபர் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் திறந்திருக்கும்.
------
(Release ID: 1760892)
Visitor Counter : 383
Read this release in:
Malayalam
,
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada