தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றபின் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன்
प्रविष्टि तिथि:
04 OCT 2021 4:48PM by PIB Chennai
நாடாளுன்ற மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோடியை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை, மீன் வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
அப்போது THIRUKKURAL-PEARLS OF INSPIRATION (திருக்குறள் – ஊக்கத்தின் முத்துக்கள்) என்ற ஆங்கில நூலை அமைச்சர் எல். முருகன், பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கினார்.
புதிய இந்தியாவின் மக்கள் நலனுக்காக தங்கள் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் பணிபுரிவதற்கான வழிகாட்டுதல்களை வழங்கவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் அமைச்சர் எல்.முருகன் வேண்டுகோள் விடுத்தார்.
********
(रिलीज़ आईडी: 1760827)
आगंतुक पटल : 257