குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கூடுதல் கடனுக்கான கடன் உத்தரவாத திட்டம் 31.03.2022 வரை நீடிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 04 OCT 2021 2:43PM by PIB Chennai

சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகள் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற கோரிக்கைகளின் அடிப்படையில் கூடுதல் கடனுக்கான கடன் உத்தரவாத திட்டத்தை 31.03.2022 வரை நீடிப்பதென மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தற்சார்பு இந்தியா சலுகைத் திட்டத்தின் கீழ் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு கூடுதல் கடனுக்கான கடன் உத்தரவாத திட்டத்தை 2020 மே 13-ந் தேதி அரசு அறிவித்தது.

நலிவடைந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளின் வாராக்கடன்களை சரிசெய்ய இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்படி கடன் வழங்கும் நிறுவனங்கள் மூலம் கூடுதல் கடன் வழங்க இந்த திட்டம் 2020, ஜூன் 24 அன்று தொடங்கப்பட்டது.

பின்னர் இந்த திட்டத்தை 31.03.2021 முதல் 30.09.2021 வரை 6 மாதங்களுக்கு நீடிக்க அரசு முடிவு செய்தது. இருப்பினும் மேலும் 6 மாதங்களுக்கு அதாவது 31.03.2022 வரை இந்தத் திட்டம் செயல்பாட்டில் இருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது.

*****


(வெளியீட்டு அடையாள எண்: 1760794) வருகையாளர் எண்ணிக்கை : 350
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Punjabi , Gujarati , Telugu , Malayalam