பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
இந்திய பழங்குடியினரின் கலை மற்றும் கைவினைப் பொருட்கள் கனடாவில் விற்பனை
प्रविष्टि तिथि:
02 OCT 2021 4:21PM by PIB Chennai
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தற்சார்பு இந்தியா மூலை என்ற பெயரில் டிரைஃபெட் நிறுவனத்தின் சார்பில், கனடாவின் ஒட்டாவா நகரில் உள்ள இந்திய தூதரகத்தில், புவிசார் குறியீடு பெற்ற பழங்குடியினத்தவரின் கலை மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடைபெறுகிறது. கனடாவுக்கான இந்தியத் தூதர் திரு.அஜய் பிசாரியா இந்தக் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
இதில் பழங்குடியின கைவினைப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பதுடன் அவை பற்றிய குறிப்புகளும் வணிக ரீதியான தகவல்கள் மற்றும் கனடாவில் இந்தப் பொருட்கள் விநியோகிக்கப்படும் இடம் உள்ளிட்ட விவரங்களும் இடம் பெற்றுள்ளன.
*****
(रिलीज़ आईडी: 1760392)
आगंतुक पटल : 236