குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
லே-யில் உலகின் மிகப்பெரிய காதி தேசிய கொடியை பறக்கவிட்டு மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்திய கதர்துறை
Posted On:
02 OCT 2021 2:56PM by PIB Chennai
இந்தியர்களின் கூட்டு உணர்வான பெருமிதம் மற்றும் தேசப்பற்று மற்றும் கதர்துறையின் பாரம்பரிய கைவினைக்கலை ஆகியவை ஒருங்கிணைந்து, கதர்துணியால் ஆன உலகின் மிகப்பெரிய தேசிய கொடியை லே-யில் இன்று பறக்கவிட்டதன் மூலம் நாட்டை ஓரணியில் திரட்டியுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த கதர் துணியை உலகிற்கு அளித்த மகாத்மா காந்திக்கு அதிகபட்ச மரியாதை செலுத்தும் விதமாக, வரலாற்றுச்சிறப்புமிக்க இந்த கதர் தேசிய கொடியை கதர் மற்றும் கிராமத்தொழில் ஆணையம் தயாரித்துள்ளது.
225 அடி நீளம், 150 அடி அகலம் மற்றும் 1400 கிலோ (உத்தேசமாக) எடையுள்ள இந்த கொடியை லடாக் துணை நிலை ஆலுனர் திரு ஆர் கே மாத்தூர் ஏற்றிவைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர் இந்த தேசிய கொடி ஒவ்வொரு இந்தியரிடமும் தேசப்பற்று உணர்வை ஏற்படுத்தும் என்றார்.
கதர் கிராம தொழில் ஆணையத்தின் தலைவர் திரு வினய் குமார் சக்ஸேனா, லடாக் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஜே டி நாம்கியால், ராணுவ தலைமை தளபதி ஜெனரல் எம் எம் நரவானே உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இந்த கொடியை 70 கதர் கைவினைஞர்கள் 49 நாட்களில் 3500 மனித வேலை மணி நேரம் உழைத்து தயாரித்துள்ளனர். மொத்தம் 33,750 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த தேசிய கொடியில், அசோக சக்கரம் மற்றும் 30 அடி சுற்றளவு கொண்டதாக தயாரிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக கதர் கிராம தொழில் ஆணையம் இந்த கொடியை தயாரித்துள்ளது.
***
(Release ID: 1760300)
(Release ID: 1760365)
Visitor Counter : 262