பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை செயலாளர் தலைமையில் நிர்பயா நிதியத்திற்கான கட்டமைப்பின் கீழ் அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் கூட்டம் நடைபெற்றது

प्रविष्टि तिथि: 01 OCT 2021 4:54PM by PIB Chennai

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை செயலாளர் தலைமையில் நிர்பயா நிதியத்திற்கான கட்டமைப்பின் கீழ் அதிகாரமளிக்கப்பட்ட குழு அதிகாரிகளின் கூட்டம் 30 செப்டம்பர் 2021 அன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பீகார், சத்தீஸ்கர், குஜராத் மற்றும் நாகாலாந்தில் உள்ள தடய அறிவியல் ஆய்வகங்களில் ரூ.17.31 கோடி செலவில், டிஎன்ஏ பகுப்பாய்வை வலுப்படுத்துதல், இணைய தடயவியல் மற்றும் அதனை சார்ந்த வசதிகளை ஏற்படுத்த வேண்டுமென்ற உள்துறை அமைச்சகத்தின் முன்மொழிவு பரிசீலிக்கப்பட்டு பரிந்துரைக்கப்பட்டது. இதனுடன் சேர்த்து 24 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் டிஎன்ஏ பகுப்பாய்வை வலுப்படுத்தும் திட்டத்திற்கு நிர்பயா நிதியத்திலிருந்து நிதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் நிர்பயா நிதியத்தின் கீழ் ரூ.9,797.02 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. காவல் நிலையங்களில் மகளிர் உதவி மையங்கள் அமைத்தல், அவசரகால உதவி ஆதரவு மையம், பாதுகாப்பான நகரத் திட்டம், மகளிர் உதவி எண் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. காவல் நிலையங்களில் மகளிர் உதவி மையங்கள் அமைத்தல், அவசரகால உதவி ஆதரவு மையம், பாதுகாப்பான நகரத் திட்டம், மகளிர் உதவி எண் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

******


(रिलीज़ आईडी: 1760056) आगंतुक पटल : 315
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Punjabi , Telugu , Kannada