எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

முதல் பசுமை கால கடன் ஒப்பந்தத்தில் என்டிபிசி-ஆர்இஎல் நிறுவனம் கையெழுத்து

प्रविष्टि तिथि: 30 SEP 2021 11:27AM by PIB Chennai

தேசிய அனல்மின் கழகத்தின் (என்டிபிசி) 100% துணை நிறுவனமான என்டிபிசி- புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனம் (ஆர்இஎல்), ரூ. 500 கோடி மதிப்பிலான அதன் முதல் பசுமை கால கடன் ஒப்பந்தத்தில் பேங்க் ஆஃப் இந்தியாவுடன் கையெழுத்திட்டுள்ளது. ராஜஸ்தானில் 470 மெகாவாட் சூரிய சக்தித் திட்டங்களையும், குஜராத்தில் 200 மெகாவாட் சூரியசக்தி திட்டங்களையும் உருவாக்குவதற்காக 15 ஆண்டுகால ஒப்பந்தத்தில் செப்டம்பர் 29-ஆம் தேதி இந்த நிறுவனம் கையெழுத்திட்டது.

என்டிபிசி-ஆர்இஎல் நிறுவனம் தற்போது 3,450 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அவற்றுள் 820 மெகா வாட் திறன் கொண்ட திட்டங்கள் நிறுவப்பட்டு வருவதுடன், 2,630 மெகாவாட் திறன் கொண்ட திட்டங்களுக்கான மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் நிலுவையில் உள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1759566

*****************


(रिलीज़ आईडी: 1759610) आगंतुक पटल : 305
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , हिन्दी , Bengali , Punjabi , Telugu , Kannada