எரிசக்தி அமைச்சகம்
வலுவான ‘சர்ச்சை தவிர்ப்பு வழிமுறையை' உருவாக்க மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் ஒப்புதல்
प्रविष्टि तिथि:
29 SEP 2021 11:27AM by PIB Chennai
தனி பொறியாளர் ஒருவர் மூலம் ‘சர்ச்சை தவிர்ப்பு வழிமுறையை’ உருவாக்க மத்திய மின்துறை, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் திரு ஆர்.கே.சிங் ஒப்புதல் வழங்கியுள்ளார். நீர்மின்சக்தி மின் நிலையங்களை அமைக்கும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான ஒப்பந்தங்களில் இந்த வழிமுறையை ஏற்படுத்துவதன் மூலம், தனியாக செயல்படும் பொறியாளர் ஒருவரை நியமிப்பது கட்டாயமாகிறது. இந்த வழிமுறை தேசிய அளவிலான மற்றும் சர்வதேச அளவிலான முக்கிய கட்டமைப்பு திட்டங்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்த பொறியாளர் சம்பந்தப்பட்ட துறையில் அனைத்து விஷயங்களையும் அறிந்த நிபுணராக இருப்பார். திட்ட பணிகளை தவறாமல் மேற்பார்வையிடும் இந்த பொறியாளர், சம்பந்தப்பட்டவர்களுடன் வெளிப்படையான முறையில் பேச்சுவார்த்தை நடத்துவார். இதன் மூலம் சர்ச்சைகளை தவிர்க்க அவர் திறம்பட பணியாற்ற முடியும்.
இந்த நடைமுறை, சர்ச்சைகளை ஆரம்ப கட்டத்திலேயே நியாயமான முறையிலும், விரைவாகவும் தீர்க்கும். இதன் மூலம் நேரம், பணம் மிச்சமாகும், திட்ட பணிகளையும் குறித்த நேரத்தில் முடிப்பதை உறுதி செய்யும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1759166
****
(Release ID: 1759166)
(रिलीज़ आईडी: 1759226)
आगंतुक पटल : 365