சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
இந்திய- அமெரிக்க சுகாதார பேச்சுவார்த்தை 2021
Posted On:
27 SEP 2021 1:18PM by PIB Chennai
இந்தியாவால் நடத்தப்படும் 4-வது இந்திய-அமெரிக்க சுகாதார பேச்சுவார்த்தையின் துவக்க விழாவில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் இன்று உரையாற்றினார்.
இருநாடுகளிடையே சுகாதாரத்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல தரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான தளமாக இந்த இரண்டு நாள் பேச்சுவார்த்தை அமையும்.
கொவிட்-19 பெருந்தொற்றின் போது 2 நாடுகளும் அளித்த ஆதரவின் பரஸ்பர ஒற்றுமையை அமைச்சர் குறிப்பிட்டுப் பேசினார்.
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே மருத்துவத்துறையில் இருதரப்பு உறவை வலுப்படுத்துவதிலும், ஒத்துழைப்பை மேம்படுத்துவதிலும் கடந்த 2020-ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட மனநலன் சம்பந்தமான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பங்கை அமைச்சர் சுட்டிக்காட்டினார். மருத்துவப் பாதுகாப்பு, தொற்று நோய்கள் மற்றும் தொற்று அல்லாத நோய்கள், சுகாதார அமைப்புமுறைகள் மற்றும் சுகாதார கொள்கைகள் சம்பந்தமான பிரச்சினைகளில் ஒத்துழைப்பை அளிக்கும் வகையில் இந்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சத்திற்கும், அமெரிக்காவின் சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறைக்கும் இடையே மருத்துவத்துறையில் மற்றொரு புரிந்துணர்வு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1758507
*****************
(Release ID: 1758597)
Visitor Counter : 276