தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
லடாக்கில் உள்ள ஹம்போட்டிங் லாவில் தூர்தர்ஷன்/அகில இந்திய வானொலி டிரான்ஸ்மிட்டர்களை மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தொடங்கி வைத்தார்
Posted On:
25 SEP 2021 2:50PM by PIB Chennai
லடாக்கில் கார்கில் அருகே உள்ள ஹம்போட்டிங் லாவில் தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலியின் உயர் சக்தி டிரான்ஸ்மிட்டர்களை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்
இந்த 10 கிலோ வாட் டிரான்ஸ்மிட்டர்கள் நாட்டின் மிக உயரமான தொலைக்காட்சி மற்றும் ரேடியோ டிரான்ஸ்மிட்டர்கள் ஆகும். சராசரி கடல் மட்டத்திலிருந்து 4054 மீட்டர் (சுமார் 13,300 அடி) உயரத்தில் இவை அமைந்துள்ளன. லே-வில் உள்ள டிரான்ஸ்மிட்டர்கள் 3501 மீட்டர் (சுமார் 11,450 அடி) உயரத்தில் உள்ளன.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், மோசமான வானிலை மற்றும் புவியியல் நிலப்பரப்பைக் கருத்தில் கொண்டு ஹம்போட்டிங் லா தளம் மிகவும் கடினமான இடங்களில் ஒன்றாகும் என்று குறிப்பிட்டார். சவாலான வானிலையில் திட்டத்தை நிறைவு செய்ததற்கு பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழுவுக்கு திரு அனுராக் தாக்கூர் பாராட்டு தெரிவித்தார்.
டி.டி.காஷ்மீருக்கு லடாக்கின் பங்களிப்பு 2021 அக்டோபர் 1 முதல் தினமும் 30 நிமிடங்களில் இருந்து ஒரு மணி நேரமாக இரட்டிப்பாகும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.
தூர்தர்ஷன்/அகில இந்திய வானொலி மூலம் இந்த பிராந்தியத்தில் உள்ள மாணவர்களுக்கு கல்வி நிகழ்ச்சிகள் கிடைக்கும். மாநில கல்வித் துறைகள் மற்றும் நிறுவனங்களுடன் இணைந்து தொலைக்காட்சி, வானொலி மற்றும் டிஜிட்டல் தளங்கள் மூலம், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு கல்வி நிகழ்ச்சிகளை பிரச்சார் பாரதி வழங்கி வருகிறது.
தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகள் சாதாரண மக்களை சென்றடையும் வகையில், செய்தி, பொழுதுபோக்கு, கல்வி உள்ளிட்டவை தொடர்பான 160 டிவி சேனல்கள் மற்றும் 48 வானொலி அலைவரிசைகளை டிடி இலவச டிஷ் மூலம் வீடுகளுக்கு மாதாந்திர கட்டணம் இல்லாமல் பிரச்சார் பாரதி கிடைக்கச் செய்கிறது. நான்கு கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு சென்றடையும் மிகப்பெரிய டிடிஎச் தளமாக டிடி ஃப்ரீ டிஷ் விளங்குகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1758003
*****************
(Release ID: 1758102)
Visitor Counter : 247