பிரதமர் அலுவலகம்

குவாட் தலைவர்களின் உச்சிமாநாட்டின் போது ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் பிரதமரின் சந்திப்பு

Posted On: 24 SEP 2021 3:10AM by PIB Chennai

செப்டம்பர் 23, 2021 அன்று அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் நடந்த குவாட் தலைவர்களின் உச்சிமாநாட்டின்போது பிரதமர் திரு நரேந்திர மோடி ஆஸ்திரேலிய பிரதமர் மாண்புமிகு ஸ்காட் மோரிசனுடன் இருதரப்பு சந்திப்பை நடத்தினார்.

தொற்றுநோய்க்கு பிந்தைய காலத்தில் இரு தலைவர்களுக்கும் இடையிலான முதல் தனிப்பட்ட சந்திப்பு இதுவாகும். பிரதமர் மோடி மற்றும் பிரதமர் மோரிசன் இடையேயான கடைசி இருதரப்பு சந்திப்பு 4 ஜூன் 2020 அன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான மூலோபாய கூட்டு ஒரு விரிவான மூலோபாய கூட்டாண்மைக்கு உயர்த்தப்பட்ட தலைவர்களின் காணொளி வாயிலாக நடந்த உச்சிமாநாடு ஆகும்.

இந்த சந்திப்பின் போது, பிரதமர்கள் இருதரப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த பரந்த அளவிலான பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர். சமீபத்தில் நடைபெற்ற முதல் இந்தியா-ஆஸ்திரேலியா வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களின் இருதரப்பு உரையாடல் உட்பட இரு நாடுகளுக்கிடையேயான வழக்கமான உயர்மட்ட ஈடுபாடுகள் குறித்தும் அவர்கள் திருப்தி தெரிவித்தனர்,

விரிவான மூலோபாய கூட்டாண்மையின் கீழ் ஜூன் 2020 இல் தலைவர்களின் காணொளி வாயிலாக நடைபெற்ற உச்சி மாநாட்டிலிருந்து சாதித்த முன்னேற்றம் குறித்து பிரதமர்கள் மறுபரிசீலனை செய்ததுடன், இந்தோ பசிபிக் பிராந்தியத்தின் அடிப்படையான பரந்த நோக்கமான பரஸ்பர நல்வாழ்விற்கான நெருக்கமான ஒத்துழைப்பைத் தொடரவும், வெளிப்படையான, சுதந்திரமான, வளமான விதிகளை முன்னேற்றவும் தீர்மானித்தனர்.

இருதரப்பு விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் (சிஇசிஏ) மீதான பேச்சுவார்த்தையில் அவர்கள் திருப்தி தெரிவித்தனர். அப்போது, முன்னாள் ஆஸ்திரேலியப் பிரதமர் திரு. டோனி அபோட்டின், பிரதம மந்திரி ஸ்காட் மோரிசனின் இந்தியாவுக்கான சிறப்பு வர்த்தகத் தூதுவராக இந்தியாவிற்கு வருகை புரிந்ததை அன்புடன் வரவேற்றனர், மேலும் டிசம்பர் 2021 க்குள் இடைக்கால ஒப்பந்தத்தில் முன்கூட்டியே அதன் பலனை அடைய இரு தரப்பினரின் அர்ப்பணிப்பையும் குறிப்பிட்டனர்.

காலநிலை மாற்ற பிரச்சினையை சர்வதேச சமூகம் அவசர அடிப்படையில் தீர்க்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர்கள் வலியுறுத்தினார்கள். இது தொடர்பாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விரிவான உரையாடலின் அவசியத்தை பிரதமர் மோடி எடுத்துரைத்தார். இரு தலைவர்களும் மாசற்ற தொழில்நுட்பங்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி விவாதித்தனர்.

பிராந்தியத்தில் இரண்டு எழுச்சிமிக்க ஜனநாயகங்கள் இருப்பதால், தொற்றுநோய்க்கு பிந்தைய உலகில் உள்ள சவால்களை சமாளிக்கவும், விநியோக சங்கிலியில் ஏற்பட்டுள்ள பின்னடைவை சரிசெய்யவும், இரு நாடுகளும் நெருக்கமாக இணைந்து பணியாற்ற வேண்டும் என்று பிரதமர்கள் ஒப்புக்கொண்டனர்.

இரு தலைவர்களும் ஆஸ்திரேலியாவின் பொருளாதாரத்திற்கும், சமூக வளர்ச்சிக்கும் துணைபுரிந்த இந்திய புலம்பெயர்ந்தோரின் மகத்தான பங்களிப்பைப் பாராட்டினர், மேலும் மக்கள் உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி விவாதித்தனர்.

இந்தியாவுக்கு வருகை தருமாறு பிரதமர் மோரிசனுக்கு பிரதமர் மோடி மீண்டும் அழைப்பு விடுத்தார்.

*************



(Release ID: 1757658) Visitor Counter : 251