எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய எஃகு பொதுத்துறை நிறுவனங்களின் சந்தைப்படுத்தல் உத்திகளை மத்திய அமைச்சர் திரு ராம் சந்திர பிரசாத் சிங் ஆய்வு செய்தார்

Posted On: 21 SEP 2021 6:05PM by PIB Chennai

மத்திய எஃகு பொதுத்துறை நிறுவனங்களின் சந்தைப்படுத்தல் உத்திகள் மற்றும் எதிர்கால திட்டங்களை ஆய்வு செய்வதற்காக அந்நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாக இயக்குநர்களுடனான கூட்டத்திற்கு மத்திய எஃகு அமைச்சர் திரு ராம் சந்திர பிரசாத் சிங் இன்று தலைமை வகித்தார்.

மத்திய எஃகு மற்றும் ஊரக வளர்ச்சி இணை அமைச்சர் திரு ஃபகன் சிங் குலஸ்தே மற்றும் செயலாளர் (எஃகு), திரு பிரதீப் குமார் திரிபாதி ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மத்திய எஃகு பொதுத்துறை நிறுவனங்களின் பல்வேறு பொருட்களுக்கான உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைப்படுத்தல் உத்திகள் குறித்து அமைச்சருக்கு எடுத்துரைக்கப்பட்டன. தேவை, விநியோகம், விலை நிலவரம், போட்டி உள்ளிட்டவற்றில் ஏற்படும் மாற்றங்களை உடனுக்குடன் மதிப்பிடுவதற்கான செயல்முறையை உருவாக்குமாறு நிறுவனங்களை அவர் கேட்டுக்கொண்டார்.

பொருட்களை துடிப்புடன் சந்தைப்படுத்துமாறும், தேசிய முக்கியத்துவம் கொண்ட மற்றும் இதர முக்கிய தற்போதைய மற்றும் எதிர்கால உள்கட்டமைப்பு திட்டங்களான பாரத்மாலா, சாகர்மாலா, சாலைப் பணிகள், ரயில்வே திட்டங்கள், அணை கட்டமைப்பு, எரிசக்தி துறை திட்டங்கள் உள்ளிட்டவற்றுக்கு முழுமனதும் பங்காற்றுமாறும் மத்திய எஃகு பொதுத்துறை நிறுவனங்களை அவர் வலியுறுத்தினார்.

தங்களது பொருட்களை பிரபலப்படுத்துவதற்கு சாத்தியமுள்ள அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்துமாறு நிறுவனங்களை அவர் கேட்டுக்கொண்டார். விநியோகஸ்தர்கள், முகவர்கள், வாடிக்கையாளர்கள் போன்றவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கவும், சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு தங்கள் அணுகலை விரிவுபடுத்தவும் பணியாற்றுமாறு அமைச்சர் அறிவுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1756756

 




(Release ID: 1756840) Visitor Counter : 197