சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
79 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு, முக்கிய மைல்கல்லை இந்தியா எட்டியுள்ளது
Posted On:
18 SEP 2021 1:53PM by PIB Chennai
கடந்த 24 மணி நேரத்தில் 2.5 கோடிக்கும் அதிகமான கொவிட்-19 தடுப்பூசிகளை செலுத்தியதன் மூலம், இந்தியாவில் இது வரை செலுத்தப்பட்டுள்ள ஒட்டுமொத்த தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 79 கோடியை (79,42,87,699) கடந்துள்ளது.
காலை 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கையின் படி, கடந்த 24 மணி நேரத்தில் 2.5 கோடிக்கும் அதிகமான கொவிட்-19 தடுப்பூசிகள் 78,49,738 அமர்வுகளில் செலுத்தப்பட்டுள்ளன.
இதுவரை ஒட்டுமொத்தமாக சுகாதார பணியாளர்களில் 1,03,67,858 பேருக்கு முதல் டோசும், 86,96,165 பேருக்கு இரண்டாவது டோசும், முன்கள பணியாளர்களில் 1,83,43,570 பேருக்கு முதல் டோசும், 1,44,00,387 பேருக்கு இரண்டாவது டோசும், 18-44 வயதுப் பிரிவினரில் 32,12,63,332 பேருக்கு முதல் டோசும், 5,62,22,452 பேருக்கு இரண்டாவது டோசும், 45-59 வயதுப் பிரிவினரில் 14,93,59,311 பேருக்கு முதல் டோசும், 6,77,70,267 பேருக்கு இரண்டாவது டோசும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 9,61,06,803 பேருக்கு முதல் டோசும், 5,17,57,554 பேருக்கு இரண்டாவது டோசும் என மொத்தம் 79,42,87,699 டோசுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த சிறப்பான சாதனைக்காக நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, “இன்றைய சாதனை அளவிலான தடுப்பூசி எண்ணிக்கைக்காக ஒவ்வொரு இந்தியரும் பெருமையடைவார்கள்,” என்று கூறியுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1756012
*****************
(Release ID: 1756084)