கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
மும்பை துறைமுகப் பொறுப்புக் கழகத்தில் தூய்மை இருவார விழா
இடுகை இடப்பட்ட நாள்:
17 SEP 2021 3:16PM by PIB Chennai
2021 செப்டம்பர் 16 முதல் 30 வரை தூய்மை இருவார விழாவை மும்பை துறைமுகப் பொறுப்புக் கழகம் கொண்டாடி வருகிறது. அனைத்து துறைகள் மற்றும் பிரிவுகளில் துறை நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
அலுவலக இணையத்தில் டிஜிட்டல் பதாகைகள் இடம்பெற்றுள்ளதோடு, தூய்மை குறித்த விழிப்புணர்வை உண்டாக்கும் வகையிலான பதாகைகள் துறைமுகத்தின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.
தூய்மை நடவடிக்கைகளை கொடியசைத்து துவக்கி வைத்த மும்பை துறைமுகப் பொறுப்புக் கழக தலைவர் திரு ராஜீவ் ஜலோட்டா, துறைத் தலைவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு தூய்மை உறுதிமொழியை செய்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து, அந்தந்த துறைகள் மற்றும் பிரிவுகளில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தூய்மை உறுதிமொழி செய்து வைக்கப்பட்டது.
*****************
(வெளியீட்டு அடையாள எண்: 1755886)
வருகையாளர் எண்ணிக்கை : 197