கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் 15 நாள் இந்தி விழா

Posted On: 17 SEP 2021 3:18PM by PIB Chennai

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில், 15 நாள் இந்தி விழா செப்டம்பர் 14ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடக்கிறது. இதில் ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர், பயிற்சியாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் இடையே பல போட்டிகள் நடத்தப்படுகின்றன.  இந்தாண்டின் கருப்பொருள் ‘‘விடுதலையின் அம்ரித் மகோத்ஸவம்’’.

கொச்சின் கப்பல் கட்டும் தளம் ஊழியர்கள் இடையே கடந்த 14ம் தேதி அன்று இந்தி வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது.  இதில் 96 ஊழியர்கள் தீவிரமாக பங்கேற்றனர். இந்த வினாடி வினா போட்டியின் முக்கிய நோக்கம், ஊழியர்கள் இடையே அலுவல் மொழி மற்றும் தற்சார்பு இந்தியாவை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக இருந்தது.

கடந்த 16ம் தேதி அன்று அழகிய இந்தி எழுத்து போட்டி நடத்தப்பட்டது. இதில் சுமார் 45 ஊழியர்கள் பங்கேற்றனர். இதில் விடுதலையின் அம்ரித் மகோத்ஸவம் பற்றிய சிறு குறிப்பு எழுத வேண்டும்.

*****************



(Release ID: 1755868) Visitor Counter : 122