குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எம்.எஸ்.எம்.இ அமைச்சகத்தின் இணை செயலாளராக உள்ள அல்கா நாங்கியா அரோராவுக்கு என்.எஸ்.ஐ.சி-யின் சிஎம்டி-யாக கூடுதல் பொறுப்பு

Posted On: 17 SEP 2021 11:46AM by PIB Chennai

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (எம்.எஸ்.எம்.) அமைச்சகத்தின் இணை செயலாளராக உள்ள திருமதி. அல்கா நாங்கியா அரோராவுக்கு செப்டம்பர் 14, 2021 முதல் தேசிய சிறு தொழில்கள் கழகம் லிமிடெட் (என்.எஸ்..சி) -யின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக (சிஎம்டி)-யாக கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

1991 – ஆம் ஆண்டு இந்திய பாதுகாப்பு கணக்கு சேவை பணியை சேர்ந்த திருமதி. அல்கா அரோரா நாடு முழுவதும் பல்வேறு செயல்பாடுகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவர். கூடுதல் ஆணையர் - கைவினைப்பொருட்கள், குடிசை வர்த்தக மையத்தின் நிர்வாக இயக்குனர், மேற்கு விமானப்படை மற்றும் இராணுவ மருத்துவமனையின் ஒருங்கிணைந்த நிதி ஆலோசகர் என மத்திய அரசின் பல முக்கிய பதவிகளில் பணியாற்றியுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1755654

 

******

(Release ID: 1755654)


(Release ID: 1755713) Visitor Counter : 210