நித்தி ஆயோக்
அடல் புத்தாக்க திட்டம், டசால்ட் சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து புத்தாக்கத்துக்கு மேலும் ஊக்குவிப்பை அளிக்கவுள்ளன
प्रविष्टि तिथि:
16 SEP 2021 2:26PM by PIB Chennai
நிதி ஆயோக்கின் அடல் புத்தாக்க திட்டம், டசால்ட் சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து, நாடு முழுவதும் புதுமை மற்றும் தொழில் முனைவோர் சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்த உள்ளன.
இது தொடர்பான ஒப்பந்தம், அடல் புதுமை திட்டம் மற்றும் டசால்ட் சிஸ்டம்ஸ் இடையே, இன்று காணொலி காட்சி மூலம் கையெழுத்தானது.
இது குறித்து அடல் புத்தாக்க திட்ட இயக்குனர், டாக்டர் சிந்தன் வைஷ்ணவ் கூறுகையில், டசால்ட் நிறுவனத்துடன் இணைந்தது வெற்றிகர கூட்டாண்மை. இது அனைத்து பயனாளிகளிடமும் நாட்டில் உள்ள அடல் புத்தாக்க திட்டத்தின் விரவாக்கத்தை குறிக்கிறது என்று கூறினார்.
டசால்ட் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் இந்திய நிர்வாக இயக்குனர் தீபக் என்.ஜி கூறுகையில், ‘‘அடல் புத்தாக்க திட்டத்துடன் இணைந்தது நீண்ட கால உறவின் தொடக்கமாகும். இது நாட்டில் தயாரிப்பாளர்கள், கண்டுபிடிப்பாளர்களின் சுற்றுச்சூழல் அமைப்பை வளர்ப்பதற்கான டசால்ட் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது’’ என்றார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1755399
----
(रिलीज़ आईडी: 1755526)
आगंतुक पटल : 570