எரிசக்தி அமைச்சகம்
15வது கிழக்கு ஆசியா எரிசக்தி அமைச்சர்களின் உச்சி மாநாடு : மத்திய அமைச்சர் திரு கிரிஷன் பால் குர்ஜார் பங்கேற்பு
Posted On:
16 SEP 2021 3:42PM by PIB Chennai
பதினைந்தாவது கிழக்கு ஆசியா எரிசக்தி அமைச்சர்களின் உச்சிமாநாடு காணொலி காட்சி மூலம் இன்று நடந்தது. இதில் மத்திய மின்துறை இணையமைச்சர் திரு கிரிஷன் பால் குர்ஜார், மின்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன் கலந்து கொண்டார்.
‘‘நாம் கவனிப்போம், நாம் தயாராவோம், நாம் செழிப்படைவோம்’ என்பதுதான் இந்த கூட்டத்தின் கருப்பொருள். இது ஆசிய நாடுகள் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் எரிசக்தி மாற்றத்துக்கான இலக்கை பின்பற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது. இது நமது பிராந்தியத்துக்கு பயனளிக்கும்.
ஆசியான் நமக்கு முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என்பதை இந்தியா உறுதி செய்தது. ஆசியான் நாடுகளுடனான செயல்பாடு, இந்தியாவின் கிழக்கு கொள்கை மற்றும் யுக்திக்கு முக்கியமான அங்கமாக இருக்கும்.
இந்தியாவின் இந்தோ-பசிபிக் தொலைநோக்கில், கிழக்கு கொள்கை முக்கியமான அம்சம்.
இந்திய எரிசக்தி மாற்று திட்டங்கள், கொள்கைகள், சவால்கள் மற்றும் கார்பன் அகற்ற முயற்சிகளில் இந்தியாவின் நிலவரம் குறித்து மத்திய அமைச்சர் சுருக்கமாக விளக்கினார்.
------
(Release ID: 1755522)
Visitor Counter : 207