எரிசக்தி அமைச்சகம்
இந்தியாவின் முதல் யூரோ பத்திரத்தை வெளியிட்டது பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம்
प्रविष्टि तिथि:
16 SEP 2021 12:58PM by PIB Chennai
மின்துறையில் முன்னணி வங்கிசாரா நிதி நிறுவனமான, பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (PFC), தனது முதல் யூரோ 300 மில்லியன், 7 ஆண்டு யூரோ பத்திரத்தை கடந்த 13ம் தேதி வெற்றிகரமாக வெளியிட்டது. இதன் மூலம் பெறப்பட்ட 1.841 சதவீத விலை, யூரோ சந்தையில் இந்திய வெளியீட்டு நிறுவனத்தால், பெறப்பட்ட மிகக் குறைந்த வசூல்.
இது , இந்திய வங்கி சாரா நிதி நிறுவனம் வெளியிட்ட முதல் யூரோ பத்திரம் மற்றும் 2017ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் இருந்து வெளியிடப்பட்ட முதல் யூரோ பத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பத்திர வெளியீட்டின்போது, ஆசிய மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த 82 முதலீட்டு நிறுவனங்கள் பங்கேற்றன. இது 2.65 மடங்கு மிகையானது.
------
(रिलीज़ आईडी: 1755449)
आगंतुक पटल : 367