சுற்றுலா அமைச்சகம்

வடகிழக்கு மாகாணங்களின் சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர்களின் இரண்டு நாள் மாநாடு நிறைவு

Posted On: 14 SEP 2021 6:03PM by PIB Chennai

மத்திய சுற்றுலா அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த வடகிழக்கு மாகாணங்களின் சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர்களின் இரண்டு நாள் மாநாடு குவஹாட்டியில் இன்று நிறைவடைந்தது. மத்திய சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் வடகிழக்கு மாகாண வளர்ச்சிக்கான அமைச்சர் திரு. ஜி. கிஷன் ரெட்டி மற்றும் அசாம் முதல்வர் திரு. ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோர் நேற்று இந்த மாநாட்டைத் துவக்கி வைத்தனர்.

மத்திய கலாச்சாரம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் இணையமைச்சர் திரு. அர்ஜுன் ராம் மேக்வால், சுற்றுலா மற்றும் பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் திரு அஜய் பட் ஆகியோரும் துவக்க விழாவில் பங்கேற்றனர்.

மாநாட்டின் இரண்டாவது நாளில் உரையாற்றிய சுற்றுலா அமைச்சகத்தின் செயலாளர் திரு. அரவிந்த் சிங், வடகிழக்கு மாகாணங்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசு மேற்கொண்டுள்ள ஏராளமான திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகள் குறித்து பங்கேற்பாளர்களிடையே எடுத்துரைப்பதில் இந்த மாநாடு வெற்றி அடைந்திருப்பதாகக் கூறினார். வடகிழக்கு மாநிலங்கள் பல்வேறு தனித்துவம் வாய்ந்த முன்முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகவும், மாநாட்டில் கலந்து கொண்ட மாநிலங்கள் பகிர்ந்து கொண்ட அனுபவங்கள் ஊக்கம் தருவதாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஸ்வதேஷ் தர்ஷன் மற்றும் பிரசாத் திட்டங்களின் கீழ் அனுமதி அளிக்கப்பட்டுள்ள திட்டங்களின் வளர்ச்சி நிலை குறித்து இரண்டாம் நாள் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1754829

                                                                                       ----

 



(Release ID: 1754892) Visitor Counter : 180