சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 அண்மைத் தகவல்

Posted On: 10 SEP 2021 9:51AM by PIB Chennai

தேசிய அளவிலான தடுப்பூசி திட்டத்தின் கீழ், இதுவரை 72.37 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 34, 973 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

கொவிட் சிகிச்சை பெறுபவர்கள் மொத்த பாதிப்பில் 1.18 சதவீதம்.

இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 3,90,646.

குணமடைந்தோர் வீதம் தற்போது 97.49 சதவீதமாக உள்ளது.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 37,681 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,23,42,299 ஆக அதிகரித்துள்ளது.

வாராந்திர பாதிப்பு வீதம் 2.31 சதவீதமாக உள்ளது. இது கடந்த 77 நாட்களாக 3 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது

தினசரி பாதிப்பு வீதம் 1.96 சதவீதமாக உள்ளது. இது கடந்த 11 நாட்களாக, 3 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.

இதுவரை நடத்தப்பட்ட மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 53.86 கோடி

 

----



(Release ID: 1753840) Visitor Counter : 177