நிதி அமைச்சகம்
கணக்குகள் ஒருங்கிணைத்தல் நெட்வொர்க் எனும் நிதி சார்ந்த தரவுகள் பரிமாற்ற முறை பற்றி அனைத்தையும் அறிவோம்
Posted On:
10 SEP 2021 8:00AM by PIB Chennai
கணக்குகள் ஒருங்கிணைத்தல் நெட்வொர்க் எனும் நிதி சார்ந்த தரவுகள் பரிமாற்ற முறையைக் கடந்த வாரம் இந்தியா அறிமுகம் செய்தது; இது முதலீடு செய்தல் மற்றும் கடன் பெறுவதில் புரட்சிகர மாற்றத்தைச் செய்யும்; லட்சக்கணக்கான நுகர்வோருக்கு மிகவும் எளிதாக இருப்பதோடு அவர்களின் நிதி சார்ந்த ஆவணங்கள் மீது கட்டுப்பாட்டையும் கொண்டிருக்கும்; கடன் வழங்குவோர் மற்றும் ஃபின்டெக் நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்களின் நிதித்திறன் தொகுப்பை விரிவாக்கும். கணக்குகள் ஒருங்கிணைப்பாளர் முறை தனிநபர்களுக்கு அவர்களின் தனிப்பட்ட நிதி சார்ந்த தரவுகள் மீதான கட்டுப்பாட்டால் அதிகாரமளிக்கிறது; மற்றபடி அவை தரவுகள் காப்பிடத்திலேயே இருக்கும்.
இது இந்தியாவில் வெளிப்படையான வங்கிமுறையைக் கொண்டு வருவதை நோக்கிய முதல் படியாகும்; மேலும் டிஜிட்டல் முறையில் தகவல் பெறுவதற்கும் தங்களின் நிதி சார்ந்த தரவுகளை நிறுவனங்களுக்கிடையே பாதுகாப்பாகவும் குறையற்ற திறனுள்ள முறையிலும் பகிர்ந்து கொள்ள லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு அதிகாரமளிக்கிறது.
வங்கிகள் செயல்பாட்டில் கணக்குகள் ஒருங்கிணைப்பாளர் முறை இந்தியாவின் எட்டு பெரிய வங்கிகளில் தொடங்கப்பட்டுள்ளது.
கணக்குகள் ஒருங்கிணைப்பாளர் முறை என்பது கடன் வழங்குதல் மற்றும் செல்வாதார நிர்வாகத்தை அதிவேகமாகவும் செலவு குறைந்ததாகவும் மாற்றும்.
1) கணக்குகள் ஒருங்கிணைப்பாளர் என்றால் என்ன?
கணக்குகள் ஒருங்கிணைப்பாளர் முறை (ஏஏ) என்பது (என்பிஎஃப்சி மற்றும் ஏஏ உரிமதாரருடன்) ஆர்பிஐ முறைப்படுத்தியுள்ள ஒரு வகை அமைப்பாகும்; இது தனிநபருக்குப் பாதுகாப்பாகவும் டிஜிட்டல் முறையில் எளிதாகவும் இருப்பதோடு அவர்கள் கணக்கு வைத்துள்ள ஒரு நிதி நிறுவனத்திலிருந்து முறைப்படுத்தப்பட்ட இதர நிதி நிறுவனத்திற்கு ஏஏ நெட்வொர்க் மூலம் தகவல் பரிமாற்றம் செய்ய உதவுகிறது. தனிநபர் ஒப்புதலின்றி தரவுகளைப் பகிர முடியாது.
கணக்குகள் ஒருங்கிணைப்பாளர் முறை நிறைய இருக்கும்; அவற்றிலிருந்து தனிநபர் தெரிவுசெய்ய முடியும்.
'தொகை குறிப்பிடாத காசோலை' வடிவிலான நீண்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ஏற்கப்படுவதற்கு பதிலாக, படிப்படியாக அனுமதி அளித்து உங்கள் தரவுகளின் ஒவ்வொரு பயன்பாட்டையும் கட்டுக்குள் வைப்பதாக கணக்குகள் ஒருங்கிணைப்பாளர் முறை மாற்றியமைக்கிறது
2) சராசரி மனிதரின் நிதி சார்ந்த வாழ்க்கையை புதிய கணக்குகள் ஒருங்கிணைப்பாளர் முறை எவ்வாறு மேம்படுத்தும்?
இப்போது இந்தியாவின் நிதி சார்ந்த நடைமுறை வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான சிக்கல்களை ஏற்படுத்துகிறது - நேரடியாகக் கையெழுத்திட்ட மற்றும் ஸ்கேன் செய்யப்பட்ட வங்கி ஆவணங்களைப் பகிரவேண்டியுள்ளது, நோட்டரியின் கையொப்பம் அல்லது பத்திர ஆவணங்களைச் சுற்றி ஓடவேண்டியுள்ளது, அல்லது உங்களின் நிதி சார்ந்த முழு விவரங்களைத் தருவதற்கு உங்களின் தனிப்பட்ட பயன்பாட்டுப் பெயர் மற்றும் கடவுச்சொல்லை மூன்றாவது நபருடன் பகிரவேண்டியுள்ளது. இவை எல்லாவற்றையும் எளிதாக, செல்பேசி அடிப்படையில், பாதுகாப்பான டிஜிட்டல் தரவுகள் பெறுதல் மற்றும் பகிர்தல் மூலம் கணக்குகள் ஒருங்கிணைப்பு நெட்வொர்க் மாற்றியமைக்கும். இது புது வகையிலான சேவை வாய்ப்புகளை - உதாரணமாகப் புதிய வகையில் கடன்பெறும் வாய்ப்புகளை உருவாக்கும்.
ஒரு நபரின் வங்கி, கணக்குகள் ஒருங்கிணைப்பு நெட்வொர்க்கில் இணைவது மட்டுமே தேவைப்படுகிறது. எட்டு வங்கிகள் ஏற்கெனவே இணைப்பைப் பெற்றுள்ளன - இவற்றில் நான்கு (ஆக்சிஸ், ஐசிஐசிஐ, எச்டிஎஃப்சி, இண்டஸ்லேண்ட் வங்கிகள்) ஏற்கெனவே ஒப்புதல் அடிப்படையில் தரவுகளைப் பகிர்ந்துவருகின்றன; மேலும் நான்கு (பாரத ஸ்டேட் வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க், ஃபெடரல் வங்கி) விரைவில் செயல்படுத்த உள்ளன.
3) ஆதார் இகேஒய்சி தரவுகள் பகிர்தல், கடன் பீரோ தரவுகள் பகிர்தல் மற்றும் சிகேஒய்சி போன்ற அமைப்புகளிலிருந்து கணக்குகள் ஒருங்கிணைப்பு முறை எவ்வாறு வேறுபடுகிறது?
ஆதார் இகேஒய்சியும் சிகேஒய்சியும் கேஒய்சி (உங்கள் வாடிக்கையாளரை அறியுங்கள்) நோக்கத்திற்காக (பெயர், முகவரி, பாலினம் போன்ற) நான்கு 'அடையாளத்' தரவுகளை மட்டுமே பகிர அனுமதிக்கின்றன. இதேபோல், கடன் பீரோ தரவுகள் கடன் பற்றிய முழுமையான விவரங்கள் மற்றும்/அல்லது கடன் புள்ளி சேகரிப்பை மட்டுமே காட்டுகின்றன. கணக்குகள் ஒருங்கிணைப்பாளர் முறை என்பது பரிவர்த்தனைத் தரவுகள் அல்லது சேமிப்பு/வைப்புத்தொகை/நடப்புக் கணக்குகளிலிருந்து வங்கித் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள அனுமதிக்கிறது.
4) எந்த வகையான தரவுகளைப் பகிர்ந்துகொள்ள முடியும்?
தற்போது வங்கிப் பரிவர்த்தனை தரவுகள் (உதாரணமாக நடப்பு அல்லது சேமிப்புக் கணக்கின் வங்கித் தரவுகள்) வங்கிகளிடையே பகிரக் கிடைக்கின்றன; இவை இணையத்தில் அப்படியே நேராகச் செல்கின்றன.
வரித் தரவுகள், ஓய்வூதியத் தரவுகள், பங்குச்சந்தை தரவுகள் (பரஸ்பர நிதி மற்றும் தரகு ) காப்பீட்டுத் தரவுகள் உட்பட நிதிசார்ந்த அனைத்துத் தரவுகளையும் ஏஏ கட்டமைப்பு படிப்படியாக வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கச் செய்யும். நிதிசார்ந்த பிரிவுக்கு அப்பால் சுகாதாரம் மற்றும் தொலைதகவல் தரவுகளும் ஏஏ வழியாக தனிநபருக்குக் கிடைக்கும் வகையிலும் இது விரிவுபடுத்தப்படும்.
5) தனிப்பட்ட தரவுகளை ஏஏ-க்கள் பார்க்க அல்லது 'ஒருங்கிணைக்க' முடியுமா? தரவுகள் பகிர்தல் பாதுகாப்பானதா?
கணக்கு ஒருங்கிணைப்பாளர்கள் தரவுகளைப் பார்க்க முடியாது; தனிநபரின் வழிகாட்டுதல் மற்றும் ஒப்புதல் அடிப்படையில் அவர்கள் வெறுமனே ஒரு நிதி நிறுவனத்திலிருந்து மற்றொன்றுக்கு அதனைக் கொண்டுசெல்வார்கள். பெயருக்கு மாறுபட்டதாக, உங்களின் தரவுகளை அவர்கள் 'ஒருங்கிணைக்க' முடியாது. ஏஏ-க்கள், உங்களின் தரவுகளை ஒருங்கிணைக்கின்ற, உங்களின் பின்புல விவரங்களை உருவாக்குகிற தொழில்நுட்ப நிறுவனங்கள் போல் இருப்பதில்லை.
ஏஏ-க்களால் பகிரப்படும் தரவுகள் அனுப்புநரால் குறியீடாக உள்ளிடப்பட்டதைப் பெறுநரால் மட்டுமே குறியீடு மாற்றம் செய்ய முடியும். ஒரு முனையிலிருந்து மறுமுனை வரையிலான குறியீடும் 'டிஜிட்டல் கையொப்பம்' போன்ற தொழில்நுட்பப் பயன்பாடும் இந்த நடைமுறையை காகித ஆவணங்கள் பரிமாற்றத்தைவிட கூடுதல் பாதுகாப்பானதாக மாற்றுகிறது.
6) தாங்கள் தரவுகள் பகிர்தலை விரும்பவில்லை என்பதை ஒரு வாடிக்கையாளர் முடிவுசெய்ய இயலுமா?
ஆம். ஏஏ-வுடன் பதிவுசெய்வது வாடிக்கையாளர்களுக்கு முழுக்க முழுக்கத் தன்விருப்பமானது. வாடிக்கையாளர் பயன்படுத்தும் வங்கி இந்த நெட்வொர்க்கில் இணைந்திருந்தால், ஒரு ஏஏ-வில் பதிவு செய்வதையும், எந்தக் கணக்குகளை அவர்கள் இணைக்க விரும்புகிறார்கள் என்பதையும், குறிப்பிட்ட நோக்கத்திற்காக புதிய கடன் வழங்குவோர் அல்லது நிதிநிறுவனத்திற்குக் கணக்கு ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர் வழியாக 'ஒப்புதல்' வழங்கும் நிலையில் அவர்களின் கணக்குகள் ஒன்றிலிருந்து தரவுகள் பகிர்தலையும் தெரிவுசெய்ய முடியும். பகிர்தலுக்கான ஒப்புதலை எந்த நேரத்திலும் ஒரு வாடிக்கையாளர் நிராகரிக்க முடியும். ஒரு காலகட்டம் வரை (உதாரணமாக கடன்பெறும் காலகட்டத்தில்) தொடர்ச்சியான முறையில் தரவுகளைப் பகிர ஒரு வாடிக்கையாளர் ஒப்புக்கொண்டிருந்தால், பின்னர் எந்த நேரத்திலும் அந்த வாடிக்கையாளர் விருப்பப்படி அதனை ரத்து செய்யவும் முடியும்.
7) ஒரு வாடிக்கையாளர் தனது தரவுகளை ஒருமுறை ஒரு நிறுவனத்துடன் பகிர்ந்தால் எவ்வளவு காலம் அவர்கள் அதனைப் பயன்படுத்த முடியும்?
தரவுகள் பகிர்தலுக்கான ஒப்புதல் நேரத்தில், பெறுகின்ற நிறுவனம் பயன்பாட்டின் சரியான காலத்தை வாடிக்கையாளருக்குக் காண்பிக்கும்.
8) ஒரு ஏஏ-வுடன் ஒரு வாடிக்கையாளர் பதிவினைப் பெறுவது எவ்வாறு?
அவர்களின் செயலி அல்லது இணையதளம் மூலம் ஒரு ஏஏ-வுடன் நீங்கள் பதிவு செய்துகொள்ளலாம். ஒப்புதல் நடைமுறையின்போது பயன்படுத்த (பயன்படுத்துபவர் பெயர் போன்ற) பயன்பாட்டு முறையை ஏஏ வழங்குவார்.
ஏஏ-க்களாக இருப்பதற்கு செயல்பாட்டு உரிமங்களுடன் தற்போது பதிவிறக்கம் செய்ய நான்கு செயலிகள் (ஃபின்வு, ஒன்மணி,.சிஏஎம்எஸ் ஃபின்செர்வ், என்ஏடிஎல் ) உள்ளன. மேலும் மூன்று செயலிகள் (ஃபோன்பே, யோட்லீ, பெர்ஃபியோஸ்) ஆர்பிஐ-யிடமிருந்து கொள்கை அளவில் ஒப்புதலைப் பெற்றுள்ளன; விரைவில் செயலிகளைத் தொடங்கலாம்.
9) ஒரு வாடிக்கையாளர் ஒவ்வொரு ஏஏ-வுடனும் பதிவு செய்வது அவசியமா?
இல்லை. நெட்வொர்க் மூலம் எந்தவொரு வங்கியிலிருந்தும் தரவுகள் பெற ஒரு வாடிக்கையாளர் எந்தவொரு ஏஏ-வுடனும் பதிவுசெய்துகொள்ளலாம்.
10) இந்த வசதியைப் பயன்படுத்த ஒரு வாடிக்கையாளர் ஏஏ-வுக்குப் பணம் செலுத்துவது அவசியமா?
இது ஏஏ-வைப் பொருத்ததாக இருக்கும். சில ஏஏ-க்கள் கட்டணம் இல்லாமல் இருக்கக்கூடும்; ஏனெனில் அவர்கள் சேவைக் கட்டணத்தை நிதி நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கிறார்கள். சிலர் பயன்பாட்டாளரிடம் சிறிதளவு கட்டணத்தை வசூலிக்கலாம்.
11) தரவுகள் பகிர்தலுக்கான ஏஏ நெட்வொர்க்கில் அவர்களின் வங்கி இணைந்தால் ஒரு வாடிக்கையாளர் என்ன புதிய சேவைகளைப் பெற முடியும்?
ஒருவர் கடன் பெறுவதையும் பண நிர்வாகம் செய்வதையும் மேம்படுத்தும் இரண்டு முக்கிய சேவைகள் உள்ளன. தற்போது ஒரு வாடிக்கையாளர் சிறு வியாபாரம் செய்ய அல்லது தனிநபர் கடன்பெற விரும்பினால், கடன் வழங்குபவருடன் நிறைய ஆவணங்களைப் பகிர்ந்துகொள்ளும் அவசியம் உள்ளது. இது இப்போது கடினமானதாகவும் உடலுழைப்பு நடைமுறையாகவும் உள்ளது; இது கடன் பெறுவதற்கு மற்றும் கடன் வழங்குவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரத்தை பாதிக்கிறது. அதேபோல், பண நிர்வாகம் இப்போது சிக்கலாக இருக்கிறது; ஏனெனில் தரவுகள் பல்வேறுபட்ட இடங்களில் சேமிக்கப்பட்டுள்ளதால் பகுப்பாய்வுக்கு எளிதாக ஒருங்கிணைத்துக் கொண்டுவர முடிவதில்லை.
கணக்குகள் ஒருங்கிணைப்பாளர் மூலம், ஒரு நிறுவனம் குறைபாடு இல்லாத பாதுகாப்பான தரவுகளை விரைவாகவும் குறைந்த செலவிலும் பெறமுடிவதோடு கடன் தொடர்பான நடைமுறை விரைவாகும்; இதனால் ஒரு வாடிக்கையாளர் விரைந்து கடன்பெற முடியும். ஜிஎஸ்டி அல்லது ஜிஇஎம் போன்ற அரசு நடைமுறையிலிருந்து நேரடியாக எதிர்கால இன்வாய்ஸ் அல்லது ரொக்க வரவு குறித்த நம்பகமான தகவல் பரிமாற்றத்தால் சொத்துப் பிணையம் இல்லாமல் ஒரு வாடிக்கையாளர் கடன் பெறவும்
----------
(Release ID: 1753837)
Visitor Counter : 700
Read this release in:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada