பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தின் ஒரு பகுதியாக முதலீட்டாளர்களுக்கு அதிகாரமளிப்பது குறித்த கருத்தரங்கை ஐஈபிஎஃப்ஏ மற்றும் ஐசிஎஸ்ஐ நடத்தின

Posted On: 07 SEP 2021 3:08PM by PIB Chennai

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதை குறிக்கும் விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தின் ஒரு பகுதியாக, ‘முதலீட்டாளருக்கு அதிகாரமளித்தல்: ஐஈபிஎஃப்ஏ, 5 வருடங்களுக்கான பயணம் மற்றும் எதிர்காலத்திற்கான வழிஎனும் தலைப்பிலான தேசிய கருத்தரங்கை முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையம் (ஐஈபிஎஃப்ஏ) மற்றும் இந்திய நிறுவன செயலாளர்கள் நிறுவனம் (ஐசிஎஸ்ஐ) ஆகியவை இணைந்து இன்று நடத்தின.

முதலீட்டாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வை கடந்த ஐந்து வருடங்களாக மக்களிடையே எடுத்துச் சென்ற தனது பயணத்தை பற்றி கருத்தரங்கின் போது ஐஈபிஎஃப்ஏ பகிர்ந்து கொண்டது.

மத்திய இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு), புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்கம் அமைச்சகம், திட்ட அமைச்சகம், மற்றும் மத்திய பெருநிறுவன அமைச்சகத்தின் இணை அமைச்சர் திரு ராவ் இந்தர்ஜித் சிங் நிகழ்ச்சியின் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார்

தனது பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள ஐஈபிஎஃப்ஏ-வை பாராட்டிய அமைச்சர், “ஐசிஎஸ்ஐ, ஐசிஏஐ, சிஎஸ்சி மற்றும் -கவர்னென்ஸ் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து 55,000-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஐஈபிஎஃப்ஏ நடத்தியுள்ளதை பற்றி அறிந்து கொள்வதற்கு மகிழ்ச்சியாக உள்ளது,” என்றார்.

மேலும் பேசிய அவர், “நாடு முழுவதுமுள்ள ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் இருக்கும் முதலீட்டாளர்கள், இல்லத்தரசிகள் மற்றும் பணியாளர்களுக்கு நேரடி நிகழ்ச்சிகள், ஊடக பிரச்சாரங்கள், குறும்படங்கள் உள்ளிட்டவற்றின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த முழுமையான முயற்சிகளை ஐஈபிஎஃப்ஏ மேற்கொண்டது,” என்றார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1752813

                                                                                      -----(Release ID: 1752980) Visitor Counter : 194