இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய விளையாட்டு வளர்ச்சி நிதிக்கு, இந்திய நிலக்கரி நிறுவனம் ரூ.75 கோடி வழங்கியது

Posted On: 07 SEP 2021 1:54PM by PIB Chennai

பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்பு (சிஎஸ்ஆர்) நிதியின் ஒரு பகுதியாக தேசிய விளையாட்டு வளர்ச்சி அமைப்புக்கு (NSDF) ரூ.75 கோடி வழங்குவதற்காகவிளையாட்டுத்துறையின் தேசிய விளையாட்டு வளர்ச்சி நிதி அமைப்பு, இந்திய நிலக்கரி நிறுவனத்துடன் (சிஐஎல்) மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாகூர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டது. மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை இணையமைச்சர், திரு நிஷித்பிரமனிக், விளையாட்டுத்துறை செயலாளர் திரு ரவி மிட்டல் மற்றும் இந்திய நிலக்கரி நிறுவன அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு அனுராக் சிங் தாகூர் பேசியதாவது:

தேசிய விளையாட்டு வளர்ச்சி நிதி அமைப்புக்கு, இந்திய நிலக்கரி நிறுவனத்தின் மதிப்புமிக்க பங்களிப்பு, சரியான நேரத்தில் கிடைத்துள்ளதுசமீபத்திய ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் இதற்கு முன் இல்லாத அளவில், இந்திய குழுவின் செயல்பாடு இருந்ததுடோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் 19 பதக்கங்கள் பெற்றுள்ளோம். அதற்காக இந்திய விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துகள்.  

இந்திய நிலக்கரி நிறுவனத்தின் முயற்சி பாராட்டத்தக்கது. இந்த நிதி நமது விளையாட்டு வீரர்களை வைரங்களாக செதுக்கும்விளையாட்டை வளர்க்கவும், தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைக்கவும் இந்த நிதி பயன்படுத்தப்படும்உள்கட்டமைப்பை நவீன முறையில் மேம்படுத்துவதற்கு, இந்த நிதி நியாயமாக பயன்படுத்தப்படும்முந்தைய ஆண்டுகளிலும், பல பொதுத்துறை நிறுவனங்கள், என்எஸ்டிஎப் அமைப்புக்கு தாராள நிதியுதவி அளித்துள்ளன. இந்திய விளையாட்டு ஆணையம் மறறும் லட்சுமிபாய் உடல்கல்வி தேசிய மையம் (எல்என்ஐபி) ஆகியவற்றின் கீழ் உள்ள விளையாட்டு அகாடமிகளுக்கு, அதிக விடுதிகள் தேவைப்படுகின்றன.   இந்திய நிலக்கரி நிறுவனம் அளிக்கும் ரூ.75  கோடி நிதி மூலம், பெங்களூர் மற்றும் போபாலில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையம், எல்என்ஐபி குவாலியரில்  விளையாட்டு வீரர்களுக்கு ஒரு விடுதியும் கட்டப்படும்நாட்டில் விளையாட்டு கலாச்சாரத்தை ஊக்குவிக்க, இந்திய விளையாட்டு ஆணையமும், நிலக்கரி இந்தியா நிறுவனமும் இணைந்து விளையாட்டு அகாடமியை உருவாக்க வேண்டும்.

பொதுத்துறை நிறுவனங்கள், பெருநிறுவனங்கள், தனிநபர்கள், சிஎஸ்ஆர் நிதியின் ஒரு பகுதியை என்எஸ்டிஎப்  அமைப்புக்கு தாராளமாக நிதியுதவியாக அளிக்க வேண்டும்.

இவ்வாறு மத்திய அமைச்சர் திரு அனுராக் தாகூர் பேசினார்.

மத்திய இணையமைச்சர் திரு நிஷித்பிரமனிக் பேசுகையில், இந்தியாவில் விளையாட்டுப் போட்டிகள் கலாச்சாரத்துக்கு, இந்திய நிலக்கரி நிறுவனம்(சிஐஎல்) எப்போதும் ஆதரவளிக்கும். சிஐஎல் வழங்கிய நிதி நியாயமாக பயன்படுத்தப்படும், திட்டங்கள் குறித்த காலத்துக்குள் நிறைவு செய்யப்படும்’’ என்றார். .

என்எஸ்டிஎப் அமைக்கான பங்களிப்பு பெரும்பாலும் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து வருகிறது. கடந்த மார்ச் 31ம் தேதி வரை சிஎஸ்ஆர் நிதியாக ரூ.170 கோடி பெறப்பட்டுள்ளது. மத்திய அரசின் விளையாட்டுத்துறை அமைச்சகம் தனது பங்காக ரூ.164 கோடி அளித்துள்ளது.

இந்த நிதியிலிருந்து, விளையாட்டு அமைப்புகளின் உள்கட்டமைப்பு, விளையாட்டு வீரர்களின் பயிற்சி, இந்திய விளையாட்டு ஆணையத்தின் ஒலிம்பிக் வெற்றிமேடை இலக்கு திட்டம்  (TOPS) ஆகியவற்றுக்கு நிதியுதவிகள் அளிக்கப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1752791

                                                                                    -------


(Release ID: 1752908) Visitor Counter : 255