சுரங்கங்கள் அமைச்சகம்

ஏலத்துக்காக 100 கனிமச் சுரங்கங்களின் அறிக்கையை 8ம் தேதி ஒப்படைக்கிறது இந்திய புவியியல் ஆய்வு மையம்

Posted On: 06 SEP 2021 3:27PM by PIB Chennai

கனிம சுரங்கங்கள் ஒதுக்கீடு மற்றும் குத்தகையில் வெளிப்படையான தன்மையை சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த சட்டம், 2015 ஏற்படுத்தியது. இந்த தொடர் முயற்சியில், எம்எம்டிஆர்ஏ கடந்த மார்ச் மாதம் மேலும் தாராளமயமாக்கப்பட்டது. சமீபத்திய இந்த திருத்தம், சுரங்கத்துறையில் வேலைவாய்ப்பு மற்றும் முதலீடு, மாநிலங்களின் வருவாய், உற்பத்தி ஆகியவற்றை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திருத்தத்துடன், தற்சார்பு இந்தியா தொலைநோக்கை நனவாக்க, இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம், 100 கனிம சுரங்கங்களை ஏலத்தில் விட முடிவு செய்துள்ளது. இதற்கான 100 அறிக்கைகள் மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்படும். இது கனிமங்களின் சுமூகமான விநியோகத்தை உறுதி செய்யும். அதிக சுரங்கங்கள் ஏலம் எடுப்பதன் மூலம் மாநிலங்களுக்கு அதிக வருவாய் கிடைக்கும்.

இந்த அறிக்கைகளை ஒப்படைக்கும் நிகழ்ச்சி தில்லியில் செப்டம்பர் 8ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் நிலக்கரி மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி, சுரங்கத்துறை இணையமைச்சர் திரு ராவ்சாஹிப் பாட்டீல் தான்வே ஆகியோர் கலந்து கொள்வர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1752536

*****************



(Release ID: 1752606) Visitor Counter : 222