சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட்-19 தடுப்பூசிகளின் எண்ணிக்கை 68.75 கோடியைக் கடந்தது
இடுகை இடப்பட்ட நாள்:
06 SEP 2021 9:40AM by PIB Chennai
குறிப்பிடத்தக்க சாதனையாக இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை நேற்று 68.75 கோடியைக் கடந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 25,23,089 கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இன்று காலை 7 மணி நிலவரப்படி, இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 68.75 கோடியைக் (68,75,41,762) கடந்தது. 71,77,219 அமர்வுகள் மூலம் இது சாதிக்கப்பட்டது.
நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தப்படும் வேகம் மற்றும் விரிவாக்கத்தை அதிகரிக்க மத்திய அரசு உறுதியுடன் உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், 43,903 நோயாளிகள் கொவிட் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,21,81,995 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் குணமடைந்தோர் வீதம் 97.44%.
மத்திய, மாநில அரசின் கூட்டு முயற்சிகளால், தினசரி கொவிட் பாதிப்பு, தொடர்ந்து 71 நாட்களாக 50,000க்கும் கீழ் உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், 38,948 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 4,04,874. இது மொத்த பாதிப்பில் 1.23 சதவீதம். கடந்த 24 மணி நேரத்தில் 14,10,649 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியா இதுவரை, 53.14 கோடி (53,14,68,867) பரிசோதனைகளைச் செய்துள்ளது.
நாடு முழுவதும் கொவிட் பரிசோதனை திறன் அதிகரித்துள்ள நிலையில், வாராந்திர பாதிப்பு வீதம் 2.58 சதவீதமாக உள்ளது. இது கடந்த 73 நாட்களாக 3 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. தினசரி பாதிப்பு வீதம், தொடர்ந்து 91 நாட்களாக 5 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1752432
*****
(Release ID: 1752432)
(வெளியீட்டு அடையாள எண்: 1752481)
வருகையாளர் எண்ணிக்கை : 296