பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

நாடு முழுவதுமுள்ள அங்கன்வாடி பணியாளர்கள் & உதவியாளர்களிடையே மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சர் திருமதி ஸ்மிரிதி இரானி உரை

Posted On: 03 SEP 2021 6:00PM by PIB Chennai

விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தின் கீழ் செப்டம்பர் மாதம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் ஊட்டச்சத்து மாதத்தின் ஒரு பகுதியாக நாடு முழுவதுமுள்ள அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களிடையே மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சர் திருமதி ஸ்மிரிதி இரானி இன்று உரையாற்றினார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக அனைத்து அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் குறிப்பாக கொவிட்-19 பெருந்தொற்று காலகட்டத்தில் ஓய்வின்றி உறுதியுடன் உழைத்ததற்காக நன்றி தெரிவித்த திருமதி இரானி, போஷன் 2.0-ல் செயல்படுத்தக்கூடிய ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை வழங்குமாறு அவர்களை கேட்டுக்கொண்டார்.

மாதம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் ஊட்டச்சத்து மாதத்தின் போது அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து தோட்டங்கள் நிறுவப்படுவதை உறுதி செய்யுமாறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களை ஊக்கப்படுத்திய அமைச்சர், குறிப்பாக நாட்டின் வளரத்துடிக்கும் மாவட்டங்களில் இதை செயல்படுத்துமாறு கூறினார்.

இது தொடர்பாக மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் அவர் உறுதியளித்தார். ஆரோக்கியம் மிக்க வளமான நாட்டை, குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் உடல்நலனோடு இருப்பதை, உறுதி செய்வது பிரதமர் திரு நரேந்திர மோடியின் லட்சியம் என்று மத்திய அமைச்சர் கூறினார்.

அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் அதி நவீன உள்கட்டமைப்பு மற்றும் ஆதரவு வழங்க வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1751772

*****************



(Release ID: 1751863) Visitor Counter : 178