விவசாயத்துறை அமைச்சகம்
உலக தேங்காய் தினத்தை கொண்டாடியது வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சகம்
Posted On:
02 SEP 2021 4:55PM by PIB Chennai
சர்வதேச தேங்காய் அமைப்பின்(ஐசிசி) நிறுவன தினத்தை கொண்டாட, உலக தேங்காய் தினத்தை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சகம் கொண்டாடியது. தென்னை வளர்க்கும் நாடுகள் இடையேயான இந்த ஐசிசி அமைப்பு, ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் ஆசிய, பசிபிக்கான சமூக ஆணையத்தின் கீழ் (UN-ESCAP) உருவாக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய வேளாண் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் பேசியதாவது:
தேங்காய் உற்பத்தியில் இந்தியா நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. உலகளவில் 3ம் இடத்தில் உள்ளது. நாட்டின் பொருளாதாரத்தில் தேங்காய், நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தேங்காய் துறையில் உள்ள ஆற்றலின் சாதகத்தை விவசாயிகளும், தொழில் முனைவோர்களும் நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும். விவசாயிகளின் முயற்சிகளுக்கு அரசு உறுதுணையாக உள்ளது.
இவ்வாறு மத்திய அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் பேசினார்.
மத்திய வேளாண் துறை இணையமைச்சர் சுஷ்ரி ஷோபா கரந்த் லஜே பேசுகையில், விவசாயிகள் சிறு மற்றும் நடுத்தர பிரிவில் இருப்பதால், எதிர்காலத்தில் உள்நாட்டு தேங்காய் தொழில், பண்ணை அளவில் சேகரிப்பதில் தான் நமது திறமை இருக்கிறது. சிறப்பான வருமானத்துக்கு பதப்படுத்துதல் முறையை மேற்கொள்ள வேண்டும். தென்னையின் துணை பொருட்களை, பல்வேறு தொழில்களுக்கு பயன்படுத்தி அதன் மதிப்பை கூட்ட வேண்டும்’’ என்றார்.
மத்திய இணையமைச்சர் திரு கைலாஷ் சவுத்திரி பேசுகையில், ‘‘ பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கின்படி, தென்னை வளர்க்கும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க, அரசு பல பலன்களை அளிக்கிறது. விவசாயிகளுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் மத்திய அரசு, வேளாண்துறைக்கு முன்னுரிமை அளிக்கிறது. அதனால்தான் வேளாண் பட்ஜெட் குறப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் மூலம் ஏராளமான விவசாயிகள் பலன்களை பெறுகின்றனர்.’’ என்றார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1751436
*****************
(Release ID: 1751506)
Visitor Counter : 227