பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அசாம் மாநிலத்தின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பின் நிலவரம் குறித்து மாநில முதல்வரிடம் பிரதமர் பேச்சு

प्रविष्टि तिथि: 31 AUG 2021 10:42AM by PIB Chennai

அசாம் மாநிலத்தின் ஒரு சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பின் நிலவரம் தொடர்பாக மாநில முதல்வர் திரு ஹிமந்தா பிஸ்வா சர்மாவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி பேசியுள்ளார். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று பிரதமர் உறுதி அளித்தார்.

பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:

“அசாம் முதல்வர் திரு ஹிமந்தா பிஸ்வா சர்மாவுடன் பேசி, மாநிலத்தின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு நிலவரம் குறித்து கேட்டறிந்தேன். நிலைமையைக் கட்டுப்படுத்தத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று உறுதி அளித்தேன். பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனிற்காக பிரார்த்தனை செய்கிறேன்.”

***


(रिलीज़ आईडी: 1750695) आगंतुक पटल : 299
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam