தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

இ-ஷிராம் தளத்தை இந்திய அரசு அறிமுகப்படுத்தியிருப்பதன் மூலம் அமைப்புசாரா தொழிலாளர்களை பதிவு செய்யும் பணி நாடு முழுவதும் தொடங்கியுள்ளது

Posted On: 26 AUG 2021 6:13PM by PIB Chennai

 -ஷிராம் தளத்தை முறைப்படி இன்று தொடங்கி வைத்த தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பெட்ரோலியம் & இயற்கை எரிவாயு இணை அமைச்சர் திரு ராமேஸ்வர் தெலியின் முன்னிலையில் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களிடம் அதை ஒப்படைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், “இந்திய வரலாற்றில் முதல் முறையாக, 38 கோடி அமைப்புசாரா தொழிலாளர்களை பதிவு செய்யும் பணிக்கான செயல்முறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது அவர்களை பதிவு செய்வதோடு, மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்படுத்தும் பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்களை கொண்டு சேர்ப்பதிலும் உதவிகரமாக இருக்கும்,”என்று தொழிலாளர் நலன் அமைச்சர் கூறினார்.

நாட்டை கட்டமைப்பவர்களாக இருக்கும் அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனை பாதுகாப்பதற்கான பிரதமர் திரு நரேந்திர மோடியின் லட்சியத்தை நிறைவேற்றும் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக இது இருக்கும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

-ஷிராம் தளத்தில் பதிவு செய்து கொண்டுள்ள ஒவ்வொரு அமைப்புசாரா தொழிலாளருக்கும் ரூ 2 லட்சம் விபத்து காப்பீட்டுக்கு ஒப்புதல் அளித்ததற்காக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்த திரு பூபேந்தர் யாதவ், தளத்தில் பதிவு செய்து கொண்ட பணியாளர் விபத்து மூலம் உயிரிழந்தாலோ அல்லது நிரந்தர ஊனம் ஏற்பட்டாலோ ரூ 2 லட்சம் வழங்கப்படும் என்றும், ஓரளவு ஊனத்திற்கு ரூ 1 லட்சம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

-ஷிராம் தளத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து எடுத்துரைத்த தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பெட்ரோலியம் & இயற்கை எரிவாயு இணை அமைச்சர் திரு ராமேஸ்வர் தெலி, இந்த இயக்கத்தில் நாட்டு மக்கள் இணைந்து, அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களையும் இத்தளத்தில் பதிவு செய்துகொள்ள வைக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1749294

 

----



(Release ID: 1749409) Visitor Counter : 516