இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

‘ஃபிட் இந்தியா இயக்கத்தின்’ 2ம் ஆண்டு தினமான 2021 ஆகஸ்ட் 29ம் தேதி அன்று, ஃபிட் இந்தியா கைப்பேசி செயலி : மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் தாகூர் தொடக்கம்

Posted On: 26 AUG 2021 1:19PM by PIB Chennai

விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தின் ஒரு பகுதியாக, ‘ஃபிட் இந்தியா இயக்கத்தின் 2வது ஆண்டுவிழாவை கொண்டாட, ‘ஃபிட் இந்தியா கைப்பேசி செயலியைமத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாகூர் , 2021 ஆகஸ்ட் 29ம் தேதி தொடங்கி வைக்கிறார்இந்த தொடக்க விழா தில்லியில் உள்ள மேஜர் தியான் சந்த், தேசிய ஸ்டேடியத்தில் நடைப்பெறும். இதில் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை இணையமைச்சர் திரு நிஷித் பிரமனிக் கலந்து கொள்கிறார்.

இந்திய ஹாக்கி அணி கேப்டன் மன்ப்ரீத் சிங், மல்யுத்தவீரர் சங்ரம் சிங், அயஸ் மேமன், கேப்டன் ஆனி திவ்யா, பள்ளி மாணவர் மற்றும் இல்லத்தரசி ஆகியோருடன் மத்திய அமைச்சர்கள் காணொலி காட்சி மூலம் இணைவர். ஃபிட் இந்தியா செயலி தொடங்கப்பட்டபின், நிகழ்ச்சியில் பங்கேற்கும் சிலர், உடல் தகுதி குறித்த செய்முறை விளக்கம் அளிப்பர். ஸ்மார்ட் போன்களில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய முடியும். கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஆகியவற்றில், இந்த செயலியை, ஆகஸ்ட் 29ம் தேதி முதல் இலவசமாக பதிவிறக்கம் செய்ய முடியும்.

இதன் தொடக்க விழாவை, ஃபிட் இந்தியா இயக்கத்தின் முகநூல் பக்கத்தில், நேரடியாக காணலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1749177

 

-----



(Release ID: 1749261) Visitor Counter : 322