சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளித்து உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி

Posted On: 24 AUG 2021 6:04PM by PIB Chennai

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளித்து உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என  மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி உறுதி அளித்துள்ளார்.

உள்கட்டமைப்பின் 9வது குழு கூட்டத்துக்கு, மத்திய அமைச்சர் திரு. நிதின்கட்கரி இன்று தலைமை தாங்கினார். இதில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ஜோதிர் ஆதித்யா சிந்தியா, ரயில்வே அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் திரு. புபேந்தர் யாதவ், மத்திய இணையமைச்சர்கள் திரு.வி.கே.சிங், திரு. அஜய் பாட் மற்றும் பல துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்

உள்கட்டமைப்புத் திட்டங்களை அமல்படுத்துவதில் அமைச்சகங்களுக்கு இடையேயான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது. நடைபெறும் உள்கட்டமைப்புத் திட்டங்களின் முன்னேற்றத்தை விரைவுபடுத்துதல், தடையில்லா சான்று பெறுவது, பணி அனுமதி பெறுவது, நிதி ஒதுக்கீடு, நிலுவையில் உள்ள சுற்றுச்சூழல் அனுமதி, நெடுஞ்சாலைத் திட்டங்கள் மற்றும் இதர கட்டுமானத் திட்டங்களுக்கு வனத்துறை ஒப்புதல் பெறுவது ஆகிய விஷயங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் எழுப்பப்பட்டது.

ரயில் உள்கட்டமைப்புக்கான புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் நிதி மாதிரிகளை ரயில்வே அமைச்சர் சுட்டிக் காட்டினார். பல முகமைகள் எழுப்பிய பிரச்சினைகளைப் பரிசீலிக்கவும்நாட்டின் வளர்ச்சிக்காக உள்கட்டமைப்புத் திட்டங்களை விரைவுபடுத்துவதில் தீர்வு காணவும்இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள் ஒப்புக் கொண்டனர்.

அதன் பின் பேசிய மத்திய அமைச்சர் திரு. நிதின் கட்கரி, ‘‘சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளித்து உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்’’ எனக் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1748606

 

---- 



(Release ID: 1748691) Visitor Counter : 250