பாதுகாப்பு அமைச்சகம்
பெண் அதிகாரிகளுக்கு, காலமுறை அடிப்படையிலான கர்னல் பதவி : இந்திய ராணுவம் வழங்குகிறது
प्रविष्टि तिथि:
23 AUG 2021 2:18PM by PIB Chennai
ராணுவத்தில் 26 ஆண்டு கால பணியை நிறைவு செய்த, 5 பெண் அதிகாரிகளுக்கு கர்னல் பதவி வழங்க, இந்திய ராணுவத்தின் தேர்வு வாரியம் அனுமதித்துள்ளது.
ராணுவத்தின் சிக்னல், எலக்ட்ரானிக், மெக்கானிக்கல் மற்றும் இன்ஜினியரிங்(இஎம்இ) படைப்பிரிவுகளில் பணியாற்றும் பெண் அதிகாரிகளுக்கு கர்னல் பதவி அனுமதிக்கப்படுவது இதுவே முதல் முறை.
இதற்கு முன்பு, மருத்துவப் பிரிவு, நீதிபதி அட்வகேட் ஜெனரல் மற்றும் கல்வி பிரிவு ஆகியவற்றில் மட்டுமே கர்னல் அந்தஸ்து வரை, பதவிஉயர்வு வழங்கப்பட்டது.
தற்போது பெண் அதிகாரிகளுக்கு, கர்னல் அந்தஸ்து வரையிலான பதவி உயர்வு, ராணுவத்தின் பல பிரிவுகளுக்கு விரிவுபடுத்தப்படுகிறது. இது ராணுவத்தில், பெண் அதிகாரிகளுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரிப்பதன் அறிகுறியாக உள்ளது. ராணுவத்தின் பல பிரிவுகளில், குறுகிய காலப் பணியில் சேர்க்கப்பட்ட பெண் அதிகாரிகளுக்கு, நீண்ட காலப் பணி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதால், இந்த நடவடிக்கை, இந்திய ராணுவத்தின் பாலின-சமத்துவ அணுகுமுறையை காட்டுகிறது.
கால முறை அடிப்படையிலான கர்னல் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் அதிகாரிகளில், சிக்னல் படைப்பிரிவைச் சேர்ந்த லெப்டினன்ட் கர்னல் சங்கீதா சர்தானா, இஎம்இ படைப்பிரிவைச் சேர்ந்த லெப்டினன்ட் கர்னல்கள் சோனியா ஆனந்த் மற்றும் நவ்னீத் துக்கல், இன்ஜினியர்ஸ் படைப்பிரிவைச் சேர்ந்த லெப்டினன்ட் கர்னல்கள் ரீனு கண்ணா மற்றும் ரிட்சா சாகர் ஆகியோர் அடங்குவர்.
*********************
(रिलीज़ आईडी: 1748252)
आगंतुक पटल : 358