பிரதமர் அலுவலகம்
சர்வதேச இளையோர் மல்யுத்த சாம்பியன்ஷிப் 2021 போட்டிகளில் , பதக்கங்கள் வென்ற மல்யுத்த வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து
Posted On:
23 AUG 2021 1:31PM by PIB Chennai
சர்வதேச இளையோர் மல்யுத்த சாம்பியன்ஷிப் 2021 போட்டிகளில், பதக்கங்கள் வென்ற மல்யுத்த வீரர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து சுட்டுரையில் அவர் விடுத்துள்ள செய்தியில்;
‘‘திறமை மிகு மல்யுத்த வீரர்களின் வலு கூடியுள்ளது. சர்வதேச இளையோர் மல்யுத்த சாம்பியன்ஷிப் 2021 போட்டிகளில், நமது இரு பாலர் அணிகளும் 4 வெள்ளி உட்பட 11 பதக்கங்களை வென்றுள்ளனர். வெற்றி பெற்ற அணிக்கு பாராட்டுக்கள். அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.’’ என குறிப்பிட்டுள்ளார்.
*****
(Release ID: 1748220)
Visitor Counter : 211
Read this release in:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada