பாதுகாப்பு அமைச்சகம்

இந்திரா முனையில் 1971 போரின் பொன்விழா வெற்றி ஆண்டு கொண்டாட்டம்

Posted On: 23 AUG 2021 11:27AM by PIB Chennai

1971-ஆம் ஆண்டு போரின் பொன்விழா ஆண்டு வெற்றிச் சுடர், நிக்கோபார் குழு தீவுகளுக்கு பயணித்து வருவதன் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் 22-ஆம் தேதி நாட்டின் தென்கோடியில் உள்ள இந்திரா முனையை சென்றடைந்தது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தைக் குறிக்கும் வகையில், அந்தமான் மற்றும் நிக்கோபாரைச் சேர்ந்த ஆயுதப் படை வீரர்கள் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, அந்தப் பகுதியின் மண்ணை சேகரித்தனர்.

 

நாட்டின் பிராந்திய பகுதிக்கு திரும்புவதற்கு முன்பு, பிரியா விடையைப் பெறுவதற்காக, வெற்றிச் சுடர், போர்ட் பிளேயரை நோக்கித் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது. பொன்விழா வெற்றியின் மனநிலையைக் கொண்டாடும் வகையில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் வடக்கு முதல் தெற்கு வரை வெற்றிச் சுடர் பயணிக்கிறது. 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் இந்தியா பெற்ற வரலாற்று சிறப்புமிக்க வெற்றியின் 50-வது ஆண்டைக் குறிக்கும் வகையில், 2021, பொன்விழா வெற்றி ஆண்டாக கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1748162

****

 

(Release ID: 1748162)



(Release ID: 1748216) Visitor Counter : 173