சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கொவிட்-19 பற்றிய அண்மைத் தகவல்

இடுகை இடப்பட்ட நாள்: 22 AUG 2021 9:33AM by PIB Chennai

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 58.14 கோடி கொவிட் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 30,948 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்பில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் விழுக்காடு 1.09%. இது, கடந்த 2020, மார்ச் மாதத்திற்குப் பிறகு மிகவும் குறைவான எண்ணிக்கையாகும்.

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,53,398 ஆக உள்ளது. 152 நாட்களுக்குப் பிறகு இந்த எண்ணிக்கை சரிந்துள்ளது.

குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.57% ஆக உயர்வு. இதுமார்ச், 2020க்குப் பிறகு மிக அதிகமான விகிதம்.

கடந்த 24 மணி நேரத்தில் 38,487 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 3,16,36,469 பேர் குணமடைந்துள்ளனர்.

வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு (2.00%) 58 நாட்களாக 3%க்கும் குறைவாக உள்ளது.

தினசரி தொற்று உறுதி வீதம் (1.95%) 27 நாட்களாக 3%க்கும் கீழ் பதிவாகியுள்ளது.

இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த  பரிசோதனைகளின் எண்ணிக்கை 50.62 கோடியாக அதிகரித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1747952

*****************


(வெளியீட்டு அடையாள எண்: 1748011) வருகையாளர் எண்ணிக்கை : 247