பாதுகாப்பு அமைச்சகம்

ஐதராபாத் பாய்மர படகு போட்டி வாரத்தின் 35 ஆம் ஆண்டுப்போட்டி

Posted On: 20 AUG 2021 10:23AM by PIB Chennai

இந்திய படகு சங்கத்தின், ஐதராபாத் பாய்மர படகு போட்டி வாரத்தின் 35ம் ஆண்டு போட்டிஐதராபாத் ஷூசைன் சாகர் ஏரியில் 2021 ஆகஸ்ட் 13ம் தேதி முதல் ஆகஸ்ட் 19ம் தேதி வரை நடந்தது.  இந்த தேசியளவிலான போட்டியில், 120 பேர், லேசர் ஸ்டாண்டர்ட்  4.7 மற்றும் ரேடிகல் ரக படகுகளில் பங்கேற்றனர். மும்பையில் உள்ள இந்திய கடற்படையின் படகு வீரர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 9 பேர், விசாகப்பட்டினத்தில் உள்ள இந்திய கடற்படையின் படகு வீரர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 5 பேர் மற்றும் ஐஎன்எஸ் மண்டோவியில் உள்ள கடற்படை மாணவர்கள் விளையாட்டு நிறுவனத்தைச் சேர்ந்த 6 பேரும் இந்த படகு போட்டியில் பங்கேற்று கடும் போட்டியை சந்தித்தனர்.  

ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தேசியளவிலான இந்த பாய்மர படகு போட்டி, கடந்த 1986ம் ஆண்டில் இருந்து நடத்தப்படுகிறது.

இதன் நிறைவு விழா, இந்திய  படகு சங்கத்தின் தலைவரும், கடற்படை தளபதியுமான அட்மிரல் கரம்பிர் சிங் முன்னிலையில் நடந்தது.  அவர், பாய்மர படகு போட்டியில் கலந்து கொண்டவர்களை ஊக்கப்படுத்தி, அவர்களின் எதிர்கால போட்டிகளுக்காக வாழ்த்து தெரிவித்தார். 

*****************(Release ID: 1747648) Visitor Counter : 202