நிலக்கரி அமைச்சகம்

அம்ரித் மகோத்சவத்தின் ஒரு பகுதியாக 2 நாள் கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை : மத்திய சுரங்க திட்டமிடல் & வடிவமைப்பு நிறுவனம் நடத்துகிறது

Posted On: 19 AUG 2021 1:59PM by PIB Chennai

அம்ரித் மகோத்சவத்தின் ஒரு பகுதியாக, மத்திய நிலக்கரி அமைச்சகத்தின்மத்திய சுரங்க திட்டமிடல் & வடிவமைப்பு நிறுவனம்  நடத்தும் 2 நாள் கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனைரவீந்திர பவனில் நேற்று தொடங்கியது.

ஜார்கண்ட் ராஞ்சி மாவட்டத்தை சுற்றியுள்ள ஊரக பெண்கள் தயாரித்த சணல் தயாரிப்புகள், சட்டங்கள், பரிசு பொருட்கள், மர கைவினைப் பொருட்கள், மூங்கில் பொருட்கள், கைப்பைகள் போன்றவை இந்த கண்காட்சியில் விற்பனை செய்யப்படும்.

பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைக்கச் செய்வதுசுற்றுச்சூழலுக்கு ஏற்ற களிமண், சணல், மூங்கில் போன்றவற்றின் தயாரிப்புகளையும் ஊக்குவிப்பதுதான் இந்த கண்காட்சியின் நோக்கம்.

இது சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கும் மற்றும் உள்ளூர் கலைஞர்களுக்கு உதவியாக இருக்கும்.

*****************(Release ID: 1747371) Visitor Counter : 256