தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய தொலைத்தொடர்பு சேவை பயிற்சி அதிகாரிகளுடன் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் கலந்துரையாடல்

இடுகை இடப்பட்ட நாள்: 19 AUG 2021 12:35PM by PIB Chennai

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் திரு சுஷில் சந்திரா, இந்திய தொலைத்தொடர்பு சேவையின் 2018 மற்றும் 2019 பிரிவு பயிற்சி அதிகாரிகளுடன் புதுதில்லியில் இன்று கலந்துரையாடினார்.

ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மையின் இந்திய சர்வதேச நிறுவனத்தில் இந்திய தொலைத்தொடர்பு சேவை ஏற்பாடு செய்துள்ள இரண்டு நாள் பயிற்சி நிகழ்வின் ஒரு பகுதியாக இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.

ஐடிஎஸ் அல்லது இந்திய தொலைத்தொடர்பு சேவை என்பது  இந்திய அரசின் குரூப் '' மத்திய குடிமைப் பணியாகும். தொலைத்தொடர்பு சம்பந்தமான துறைகளில் அரசின் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மைப் பணிகளை இந்த சேவை மேற்கொள்கிறது.

மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொலைத்தொடர்பு துறை, ஐடிஎஸ் அதிகாரிகளின் பயிற்சி, நியமனம், ஊதியம், சலுகை உள்ளிட்ட விஷயங்களை மேற்கொள்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1747322

*****************


(வெளியீட்டு அடையாள எண்: 1747361) வருகையாளர் எண்ணிக்கை : 312
இந்த வெளியீட்டை படிக்க: Telugu , English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Punjabi , Gujarati