சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
ஆயுஷ்மான் பாரத்-பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் 2 கோடி மருத்துவமனை அனுமதிகளை குறிக்கும் ஆரோக்கிய தாரா 2.0-க்கு திரு மன்சுக் மாண்டவியா தலைமை வகித்தார்
Posted On:
18 AUG 2021 4:58PM by PIB Chennai
ஆயுஷ்மான் பாரத்-பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் 2 கோடி மருத்துவமனை அனுமதிகளை குறிக்கும் ஆரோக்கிய தாரா 2.0 எனும் நிகழ்ச்சிக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா இன்று தலைமை வகித்தார்
வரலாற்று சிறப்புமிக்க இரண்டு கோடி மருத்துவமனை அனுமதிகள் நேற்று நிறைவுற்ற நிலையில், 2018 செப்டம்பர் 23 அன்று தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் நாட்டின் 33 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 23,000 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலம் ரூ 25,000 கோடி மதிப்பிலான சிகிச்சைகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன.
இந்த சாதனை குறித்து மகிழ்ச்சி தெரிவித்து, இதை சாத்தியமாக்கிய அனைத்து பணியாளர்களையும் பாராட்டிய மத்திய சுகாதார அமைச்சர், “ஏழை மக்களுக்கு தரமான மற்றும் குறைந்த செலவிலான மருத்துவ சிகிச்சையை உறுதி செய்வதற்கான திட்டமாக ஆயுஷ்மான் பாரத்-பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம் விளங்குகிறது. இதன் மூலம் அனைத்து பயனாளிகளும் ஒரு குடும்பத்திற்கு ஒரு வருடத்திற்கு ரூ 5 லட்சம் வரை சுகாதார சேவைகளை கட்டணமின்றி பெறலாம். இதன் காரணமாக கடன் வாங்கும் அவசியமில்லாமல் ஏழை மக்கள் சிகிச்சை பெறுகிறார்கள்,” என்றார்.
ஆயுஷ்மான் பாரத்-பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தை விரிவுபடுத்தி ஏழைகளிலும், மிகவும் ஏழை குடும்பங்களையும் அடையும் விதமாக, திட்டம் குறித்த விழிப்புணர்வை பயனாளிகள் இடையே ஏற்படுத்தும் வகையிலும் ஆரோக்கிய தாரா 2.0-வை காணொலி மூலம் அமைச்சர் தொடங்கி வைத்தார்.
கீழ்காணும் இணைப்புகளில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது
முகநூல் - https://www.facebook.com/AyushmanBharatGoI/live_videos/
டிவிட்டர் - https://twitter.com/i/broadcasts/1MYxNmomYwQJw
யூடியூப் - https://youtu.be/fWQj-qZ6YZA
மேலும் தகவல்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1746975
----
(Release ID: 1747151)
Visitor Counter : 311