மத்திய அமைச்சரவை
azadi ka amrit mahotsav

ஹைட்ரோப்ளூரோ கார்பன்கள் குறைப்புக்கான ஓசோன் அடுக்கை பாதிக்கும் பொருட்களின் மான்ட்ரீல் நெறிமுறைக்கான கிகாலி திருத்தத்தின் பின்னேற்பு ஒப்பந்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 18 AUG 2021 4:12PM by PIB Chennai

ஹைட்ரோப்ளூரா கார்பன்கள் குறைப்புக்கான ஓசோன் அடுக்கை பாதிக்கும் பொருட்களின் மான்ட்ரீல் நெறிமுறைக்கான கிகாலி திருத்தத்தின் பின்னேற்பு ஒப்பந்தத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. இந்த ஒப்பந்தம்  ருவாண்டா கிகாலியில் 2016ம் ஆண்டு நடந்த 28வது கூட்டத்தில் சம்பந்தப்பட் நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

பயன்கள்:

(i) ஹைட்ரோ ப்ளூரோ கார்பன் குறைப்பு, பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை தடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பருவநிலை மாற்றத்தை தடுக்கவும், மக்களுக்கு பயனளிக்கவும் உதவும்.

(ii) ஒப்புக்கொள்ளப்பட்ட திட்டத்தின்படி தொழிற்சாலைகள் ஹைட்ரோகார்பன்களை குறைக்கும் செயலில் ஈடுபடும். ஹைட்ரோப்ளூரோ கார்பன்கள் அற்ற மற்றும் குறைந்த புவி வெப்பத்துக்கு ஏற்ற தொழில்நுட்பங்களுக்கு மாறும்.

 யுக்திகள் அமலாக்கம் மற்றும் இலக்குகள்:

(i) 2023ம் ஆண்டுக்குள் தொழிற்சாலைகளுடன் ஆலோசித்து, இந்தியாவில் ஹைட்ரோப்ளூரோ கார்பன்களை குறைக்கும் தேசிய யுக்தி மேம்படுத்தப்படும்.

(ii) 2024ம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள், கிகாலி திருத்தத்தின் படி, இணங்கி செயல்படுவதை உறுதி செய்ய தற்போதைய சட்டங்கள், ஓசோன் பாதிப்பு பொருட்களுக்கான விதிமுறைகள் திருத்தம் செய்யப்படும்.

முக்கிய தாக்கம்: (வேலைவாய்ப்பு உற்பத்தி உட்பட)

(i) ஹைட்ரோ ப்ளூரோ கார்பன்கள் குறைப்பு, கார்பன்டை ஆக்சைடு வெளியேற்றத்தை 105 மில்லியன் டன் அளவுக்கு குறைக்கும். ஒசோன் அடுக்கை பாதுகாப்பதோடு, 2100-ம் ஆண்டுக்குள் புவி வெப்பத்தை 0.5 டிகிரி செல்சியஸ் வரை தவிர்க்க உதவும்

(ii) கிகாலி திருத்தத்தின் கீழ் ஹைட்ரோ ப்ளூரோ கார்பன் குறைப்பை அமல்படுத்துவது, எரிசக்தி சேமிப்பை ஏற்படுத்துவது, கார்பன் வெளியேற்றத்தை குறைக்கும், பருவநிலைக்கு பயனுள்ளதாக இருக்கும்

(iii) ஹைட்ரோப்ளூரோ கார்பன்கள் குறைப்பு அமலாக்கம், பொருளாதார, சமூக பயன்கள், சுற்றுச்சூழல் ஆதாயங்களை அதிகரிக்கும் நோக்கில் அரசு திட்டங்களை ஒருங்கிணைக்கும்.

(iv) சாதனங்கள், ஹைட்ரோ ப்ளூரோ கார்பன்கள் அல்லாத மாற்று, குறைந்த வெப்பத்தை வெளிப்படுத்தும் ரசாயணங்கள் ஆகியவை உள்நாட்டில்  உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும்இதன் மூலம் குறைந்த வெப்பத்தை வெளிப்படுத்தும் மாற்று தொழில்நுட்பத்துக்கு தொழிற்சாலைகள மாற முடியும்புதிய தலைமுறை மாற்று குளிர்சாதனங்கள் மற்றும் அது தொடர்பான தொழில்நுட்பங்களை உள்நாட்டில் ஊக்குவிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். இதன் மூலம் வேலைவாய்ப்புகள் பெருகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1746946

 

---


(Release ID: 1747013) Visitor Counter : 452