உள்துறை அமைச்சகம்
ஆகஸ்ட் 14 பிரிவினை கொடுமைகள் தினமாக அனுசரிக்கப்படும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் முடிவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வரவேற்பு
प्रविष्टि तिथि:
14 AUG 2021 3:02PM by PIB Chennai
ஆகஸ்ட் 14 ஆம் தேதி பிரிவினை கொடுமைகள் தினமாக அனுசரிக்கப்படும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் முடிவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள திரு அமித் ஷா, “நாட்டின் பிரிவினையின் போது வன்முறை மற்றும் வெறுப்பின் நிழலில் வெளியேற்றப்பட்ட எண்ணிலடங்கா நமது சகோதரி சகோதரர்களின் தியாகம் மற்றும் போராட்டத்தின் நினைவாக, ஆகஸ்ட் 14 பிரிவினை கொடுமைகள் தினமாக அனுசரிக்கப்படும் என்று திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் இந்த உணர்ச்சிமிக்க முடிவை நான் வரவேற்கிறேன்,” என்று கூறியுள்ளார்.
“நாட்டின் பிரிவினை காயம் மற்றும் அன்புக்குரியவர்களை இழந்த வலி ஆகியவற்றை வார்த்தைகளால் விளக்க முடியாது. பாகுபாடு மற்றும் வெறுப்பு ஆகியவற்றை சமுதாயத்தில் இருந்து நீக்கி, அமைதி, அன்பு மற்றும் ஒற்றுமையை ‘பிரிவினை கொடுமைகள் தினம்’ வலுப்படுத்தும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்று மத்திய உள்துறை அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
*****************
(रिलीज़ आईडी: 1745844)
आगंतुक पटल : 308