சுற்றுலா அமைச்சகம்

இந்தியா, பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்கா சுற்றுலா அமைச்சர்களின் காணொலி கூட்டம்: இந்தியா நடத்தியது

Posted On: 13 AUG 2021 3:09PM by PIB Chennai

இந்தியா, பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்கா (IBSA ) ஆகிய நாடுகளின் சுற்றுலா அமைச்சர்களின் காணொலி காட்சி கூட்டத்தை இந்தியா நேற்று நடத்தியது.

இந்திய சுற்றுலாத்துறை அமைச்சர் திரு ஜி.கிஷன் ரெட்டி, பிரேசில் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கில்சன் மேக்கடோ நேட்டோ மற்றும் தென்கொரியா சுற்றுலாத்துறை துணை அமைச்சர் திரு ஃபிஸ் அமாஸ்  மஹ்லலேலா ஆகியோர் நேற்று காணொலி காட்சி மூலம் சந்தித்து பேசினர்.

இப்சாஉறுப்பு நாடுகள் இடையே சுற்றுலாத்துறை ஒத்துழைப்பை ஊக்குவிக்கவும், ஆய்வு செய்யவும், இப்சா சுற்றுலாத்துறை அமைச்சர்கள் கூட்டத்தை இந்தியா நடத்தியது.

இந்த கூட்டத்தில், கொவிட் தடுப்பூசி திட்டத்தை இந்தியா தீவிரமாக மேற்கொள்வதையும், 500 மில்லியன் தடுப்பூசிகளை செலுத்தி, உலகின் 2வது பெரிய நாடாக இந்தியா மாறியுள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி தெரிவித்தார்.  சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வருகைக்காக, உள்நாட்டு சுற்றுலாத்துறையை தயார்படுத்துவதால், சுற்றுலா பொருளாதாரத்தையும் மீண்டும் வலுப்படுத்துவதில், உள்நாட்டு சுற்றுலாவின்   முக்கியத்துவத்தை அமைச்சர்கள் வலியுறுத்தினர். 

சுற்றுலாத்துறையில் கொவிட்-19 பாதிப்பை சமாளிக்க சுற்றுலாவில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் அவசியத்தை இப்சா சுற்றுலா அமைச்சர்கள் ஒப்புக்கொண்டனர்.

சுற்றுலாத்துறையில் ஒத்துழைப்பு மூலம், இப்சா நாடுகளின் முழு ஆற்றலை உணர, இணைந்து செயல்பட அமைச்சர்கள் தீர்மானித்தனர்.  

சுற்றுலாத்துறை விரைவில் மீள, ஒத்துழைப்புடன் செயல்படும் கூட்டறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதுதான் இந்த கூட்டத்தின் முக்கிய அம்சமாகும்.  சுற்றுலாத்துறை செயல்பாடுகள் பலவற்றை அமல்படுத்த, அந்தந்த நாடுகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை அமைச்சர்கள் ஒப்புக் கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1745420

*****************

 


(Release ID: 1745593) Visitor Counter : 298