தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

பிரசார் பாரதியின் முழு அளவிலான ஒலிம்பிக் போட்டி ஒளிபரப்பு - பல மில்லியன் டிஜிட்டல் பார்வையாளர்களுடன் வெற்றி பெற்றது

Posted On: 13 AUG 2021 12:17PM by PIB Chennai

ஒலிம்பிக்  போட்டியில், இந்திய குழுவினர் பல முதல் சாதனைகளை படைத்து வெற்றியுடன் திரும்பினர்.  இதற்கு முன் நடக்காத சாதனை, புதிய இந்தியாவுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. இந்த நம்பிக்கை, நாடு முழுவதும் முழுமையான ஒளிபரப்பு மூலம் நாட்டு மக்கள் ஒவ்வொருவரையும் சென்றடையமுக்கிய பங்காற்றியதை பகிர்ந்து கொள்வதில் பிரச்சார் பாரதி மகிழ்ச்சியடைகிறது.

பல ஒலிம்பிக் நிகழ்வுகளில், நமது சாம்பியன்கள் சாதனை படைத்தபோது, பிரச்சார் பாரதி தனது ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் தளங்கள் மூலம், ஒலிம்பிக் வெற்றியின் நேரடி காட்சிகளை ஒவ்வொரு வீட்டுக்கும் டி.வி, ரேடியோ மற்றும் ஸ்மார்ட் போன்கள் மூலம் கொண்டு சேர்த்தது.

டிடி ஸ்போர்ட்ஸ் மற்றும் அகில இந்திய வானொலியின் விளையாட்டு நெட்வொர்க் ஆகியவற்றின் ஒளிபரப்பு, இந்தியர்கள் இடையே மிகவும் பிரபலமாக இருந்தது, பிரச்சார் பாரதியின் யூ டியூப் சேனல்கள் மற்றும் நியூஸ் ஆன் ஏர் செயலி ஆகியவற்றில் பதிவான பல மில்லியன் டிஜிட்டல் பார்வையாளர்கள் மூலம் இது தெரிகிறது. 

டி.டி. நேஷனல் சேனலில் 14 ஒலிம்பிக் வீடியோக்கள், 6.6 மில்லியன் முறை, 2.6 லட்சம் மணி நேரத்துக்கு பார்க்கப்பட்டுள்ளன.

பிரச்சார் பாரதி விளையாட்டு சேனலில், 74 வீடியோக்கள் 5.8 மில்லியன் முறை 1.4 லட்சம் மணி நேரம் பார்க்கப்பட்டுள்ளன.

பொறுப்புள்ள அரசு ஒளிபரப்பு நிறுவனமாக பிரசார் பாரதி, மிகவும் தொலைதூர பகுதிகளுக்கு ஒலிம்பிக் ஒளிபரப்புகளை கொண்டு சென்றதோடு மட்டும் அல்லாமல், சிறப்பு மாற்றுத்திறனாளிகளுக்கும் கொண்டு சென்றுள்ளது. ஒலிம்பிக் நிகழ்ச்சிகள் ஒளிபரப்புக்கு, 14 சைகை மொழி கலைஞர்களையும் பிரச்சார் பாரதி பணியில் ஈடுபடுத்தியிருந்தது. அவர்கள் ஒலிம்பிக் நேரடி ஒளிபரப்பை சைகை மொழிகளில் அளித்தனர். நமது வானொலி நேயர்களுக்கு, 16 அகில இந்திய வானொலி வர்ணனையாளர்கள், பல ஒலிம்பிக் நிகழ்ச்சிகளை ஒவ்வொரு நொடியும் விரிவாக விளக்கினர்.

டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டியின், எங்கள் டிஜிட்டல் ஒளிபரப்பு முழுமையானது மற்றும் பன்முகத்தன்மை வாய்ந்தது.  ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பியதோடு, தொடக்கவிழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள், இந்திய முன்னணி விளையாட்டு வீரர்களுடன் சிறப்பு மெய்நிகர் கருத்தரங்கு, இந்திய ஒலிம்பிக் குழுவினரின் வெற்றிக் கதைகள், நாடு முழுவதும் ஒலிம்பிக்  வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சிகள் உட்பட பலவற்றையும் பிரச்சார் பாரதி ஒளிபரப்பியது. 

*****************



(Release ID: 1745427) Visitor Counter : 291