இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

2017-18 மற்றும் 2018-19ம் ஆண்டுகளுக்கான தேசிய இளைஞர் விருதுகள்: மத்திய அமைச்சர் திரு அனுராக் தாகூர் நாளை வழங்குகிறார்

Posted On: 11 AUG 2021 5:38PM by PIB Chennai

2017-18 மற்றும் 2018-19ம் ஆண்டுகளுக்கான தேசிய இளைஞர் விருதுகளை, மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் தாகூர், புது தில்லி விஞ்ஞான் பவனில் நாளை(ஆகஸ்ட் 12ம் தேதி) வழங்குகிறார்.

சர்வதேச இளைஞர் தினம் 2021- கொண்டாடும் வகையில், வேளாண் நிறுவனங்கள் சவால் போட்டியில் வெற்றி பெற்ற 10 இளம் தொழில் முனைவோர் குழுக்கள்மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை இணையமைச்சர் திரு நிஷித் பிரமனிக்கால் பாராட்டப்படுவர்.

மொத்தம் 22 தேசிய இளைஞர் விருதுகள் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும். 2017-18ம் ஆண்டு பிரிவுக்கு மொத்தம் 14 விருதுகள் வழங்கப்படும். இதில் 10 விருதுகள் தனிநபர்களுக்கும், 4 விருதுகள் நிறுவனங்களுக்கும் வழங்கப்படும். 2018-19ம் ஆண்டு பிரிவில் 8 விருதுகள் வழங்கப்படும். இதில் 7 விருதுகள் தனிநபர்களுக்கும், 1 விருது நிறுவனத்துக்கும் வழங்கப்படும். இந்த விருதில், ஒரு பதக்கம், ரொக்கத் தொகை தனிநபருக்கு  ரூ.1 லட்சம், நிறுவனத்துக்கு ரூ.3 லட்சம் வழங்கப்படும்.

வளர்ச்சி மற்றும் சமூக சேவை, சுகாதாரம், மனித உரிமைகள் மேம்பாடு, சமுதாய சேவை போன்ற துறைகளில் சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள் (15 முதல் 29 வயதுடையவர்கள்) மற்றும் நிறுவனங்களுக்கு இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் தேசிய இளைஞர் விருதுகளை வழங்குகிறது.   

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744847

-----



(Release ID: 1744933) Visitor Counter : 227