பிரதமர் அலுவலகம்

இமாச்சலப் பிரதேசத்தின் கின்னாரில் ஏற்பட்ட நிலச்சரிவு குறித்து மாநில முதலமைச்சருடன் பிரதமர் பேச்சு

प्रविष्टि तिथि: 11 AUG 2021 3:01PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, இமாச்சலப் பிரதேசத்தின் கின்னாரில் ஏற்பட்ட நிலச்சரிவின் நிலவரம் குறித்து அம்மாநில முதல்வர் திரு ஜெயராம் தாகூருடன் பேசியுள்ளார். நடைபெற்றுவரும் மீட்பு பணிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று பிரதமர் உறுதியளித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:

கின்னாரில் நிகழ்ந்த நிலச்சரிவையடுத்து, அங்குள்ள நிலவரம் பற்றி பிரதமர் திரு நரேந்திர மோடிஇமாச்சலப் பிரதேச முதல்வர் திரு ஜெயராம் தாகூருடன் பேசினார். தற்போது நடைபெற்று வரும் மீட்பு நடவடிக்கைகளுக்குத் தேவையான உதவிகள் அளிக்கப்படும் என்று பிரதமர் உறுதியளித்தார்.”

                                                                                                                            ------


(रिलीज़ आईडी: 1744803) आगंतुक पटल : 274
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam