உள்துறை அமைச்சகம்

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வாழ்த்து

प्रविष्टि तिथि: 07 AUG 2021 11:04AM by PIB Chennai

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "மிகுந்த திறமை மிக்க நமது நெசவாளர் சமுதாயத்திற்கும், கைத்தறி உடன் தொடர்புடையவர்களுக்கும் தேசிய கைத்தறி தினத்தன்று எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று கூறியுள்ளார்.

"சர்வதேச அங்கீகாரம் பெற்ற துடிப்புமிக்க பாரம்பரிய கைத்தறி தொழிலை பெற நாம் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம். இத்துறைக்கு அதிகாரம் அளிக்க அனைத்து நடவடிக்கைகளையும் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு எடுத்து வருகிறது."

"தேசிய கைத்தறி தினத்தன்று, இந்திய கைத்தறி பொருட்களை அணியவும் மற்றவர்களையும் அவ்வாறு செய்ய ஊக்கப்படுத்தவும் நாம் உறுதி ஏற்போம். பண்டைய நெசவாளர்களின் வளமிக்க பாரம்பரியத்தை ஊக்குவிக்கவும் பாதுகாக்கவும் உண்மையிலேயே இது தான் சிறந்த வழியாகும்."

*****************


(रिलीज़ आईडी: 1743598) आगंतुक पटल : 291
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Gujarati