சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

பிரதமரின் தக்ஷ் தளம் மற்றும் பிரதமரின் தக்ஷ் கைப்பேசி செயலியை ஆகஸ்ட் 7 அன்று அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைக்கிறார்

प्रविष्टि तिथि: 06 AUG 2021 12:29PM by PIB Chennai

புதுதில்லி டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் உள்ள நாளந்தா அரங்கில் 2021 ஆகஸ்ட் 7 அன்று நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பிரதமரின் தக்ஷ் தளம் மற்றும் பிரதமரின் தக்ஷ் கைப்பேசி செயலியை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைக்கிறார்

தேசிய மின் ஆளுகை பிரிவுடன் (NeGD) இணைந்து மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் உருவாக்கியுள்ள இந்த தளமும், செயலியும் பின்தங்கியோர், பட்டியல் பிரிவினர் மற்றும் துப்புரவு தொழிலாளிகளுக்கு திறன் வளர்த்தல் திட்டங்களை கிடைக்க செய்யும்.

இந்த முன்னெடுப்பின் மூலம் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பிரிவில் உள்ள இளைஞர்கள் திறன் வளர்த்தல் பயிற்சி திட்டங்களின் பலன்களை எளிதில் அடைய முடியும்.

பிரதமரின் தக்ஷ் திட்டம் 2020-21-ம் ஆண்டு முதல் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணை அமைச்சர்கள் திரு ராம்தாஸ் அத்வாலே, திரு ஏ நாராயணசாமி மற்றும் திருமிகு பிரதிமா பவுமிக், அமைச்சகத்தின் செயலாளர் திரு ஆர் சுப்பிரமணியம் ஆகியோர் நாளைய நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1743094

*****************


(रिलीज़ आईडी: 1743311) आगंतुक पटल : 428
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam