ஊரக வளர்ச்சி அமைச்சகம்

விடுதலையின் அம்ரித் மகோத்சவம்: நாடு முழுவதும் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சிமையங்கள் மூலம் 87 முகாம்கள் நடத்தப்பட்டன

प्रविष्टि तिथि: 06 AUG 2021 12:34PM by PIB Chennai

அம்ரித் மகோத்சவம் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையங்கள்  87 ‘அணிதிரட்டல்முகாம்களை கடந்த ஜூலை 30ம் தேதி முதல் கடந்த 5ம் தேதி வரை நடத்தின.

19 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் நடத்தப்பட்ட இந்த முகாம்களில் பங்கேற்றவர்களுக்கு, பல பயிற்சி திட்டங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டது.

ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையங்களில், 64 பயிற்சி திட்டங்களில் மொத்தம் 37.81 லட்சம் பேருக்கு பயிற்சி திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 26.65 லட்சம் பேர் சுய வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

இத்திட்டம் தற்போது 28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் 585 ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுக்கு பொதுத்துறை மற்றும் தனியார் உட்பட 23 முன்னணி வங்கிகள் ஆதரவு அளிக்கின்றன.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1743097

*****************


(रिलीज़ आईडी: 1743309) आगंतुक पटल : 312
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , Punjabi , English , Urdu , हिन्दी , Bengali , Gujarati , Telugu